பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o § 4 அகத்திணைக் கொள்கைகள் மேலவர் செல்லும் நெறியிலே சென்று வாழாத சால்பு இலன்: என்று கூறி அவன் வரைந்துகொள்ளவேண்டும் என்றகுறிப்பினைத் கொண்ட நற்றினைப் பாடல் ஒன்றினைக் காண்கின்றோம். . தொகைத் தோழியொருத்தி தலைவியின் ஆற்றாமையையும் தலைவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகின்றமையும் எடுத்துக்காட்டி வரைவு கடாவுகின்றாள். வீழ்பெயல் கங்குலின் விளியோர்ந்த ஒடுக்கத்தால் வாழுநாட் சிறந்தவள் வருந்துதோள் தவறுண்டோ தாழ்செறி கடுங்காப்பின் தாய் முன்னர் நின்சாரல் ஊழுறு கோடல்போல் எல்விளை உகுபவால்..”* (வீழ்பெயல் வீழ்கின்ற மழை, கங்குல் - இரவு; விளி யோர்ந்த ஒடுக்கம் - இரவுக்குறிக்கண் தலைவன் புள் ளெழுப்புதல் முதலிய அழைப்புக் குறியாகிய ஒலியுண்டா வதைக் கூர்ந்து உணரும் பொருட்டு ஒருவழிப்பட்டு நெஞ்சம் ஒடுங்கிய ஒடுக்கம்) தாயால் தலைவி இற்செறிக்கப்பட்டிருப்பதையும், தலைவன் இரவுக் குறியின்போது செய்யும் குறிகளைத் தாரகமாகக் கொண்டு அவள் உயிர் வாழ்வதையும் பாடல் புலப்படுத்துகின்றது. இந் நிலையில் அவளுடைய பூப்போலும் கண்பாடின்மையை நீங்கிப் பாடுவதற்கும் அஞ்சுவேன்; அதற்குக் காரணம் என்னவெனில், அத்துயிலிடை வருந்தத் தக்க கனவால் பின்னர்த் தாங்கிய அரிய வருத்தத்தால் உற்ற கேட்டைச் சீர்தூக்கின் அஃது எல்லையறிய வொண்ணா மலையினும் மாணப் பெரிதாயிரா நின்றது. இனி இவ்வருத்தம் அவள் உறாதவண்ணம் நீ வரையாமல் பிரியப் பட்டாளொடு கொண்ட உறவு பின்னுதலை நீ ஈதல்வேண்டும்’ என்று கூறி வரைவுகடாவுகின்றாள் தோழி. பகற்குறி வரினும் இரவுக்குறி வரினும் அவற்றை மறுத்து வரைவுகடாவும் முறைகளில் தோழியின் மதிநுட்பத்தைக் கண்டு மகிழலாம். இத்துறைகளில் பாடிய புலவர்களின் கற்பனை வளத்தையும் பார்க்கலாம். இரவுக்குறியில் வந்தொழுகும் 568ಬ.613ಣತೆ இறுந்தொகைத் தோழி வரைவு கடாவும் முறை முன்னிலைப் புறமொழியாக அமைந்துள்ளது. 141, நற். 233 142. கலி - 48

  1. 43. முன்னிலைப் புறமொழியாவது கூறப்படும் செய்தியைக் கேட்டறிதற்குரியவர் முன்னே இருப்பவும் அவரை விளித்துக் கூறிாமல், வேறொருவரையேனும் பிறிதொரு பொருளையேனும் விளித்துக் கிகழ்iiது.