பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழியிற் ستة மரபுகள் 161 தாழி காவலொடு மாறுகொள்ளாதாயிற்று. நீ அன்று கவலுதி னச் சொல்லேனாயினேன் என்றமையால் தலைமகள் நாணி னாடு மாறுகொள்ளாதாயிற்று. இனிப் பிறிதொன்றாங் கால்லோ எனக் கலங்கி வேறுபட்டேன்' என்றமையால் உலகி iனாடு மாறுகொள்ளாதாயிற்று. எனவே, மறைவில் நிகழ்ந்த ளவு நிகழ்ச்சியை அறமெனக் காட்டுமாறும் அங்ஙனம் காட்டி 1ற்றலே அறத்தொடு நிற்றலாமாறும் இதனால் நன்கு தெளி பாகும. அயலார் தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற ;ாலத்தில் அதுகாறும் தலைவனைப்பற்றிய செய்தியை வெளி பிடாத குறுந்தொகைத் தலைவி ஒருத்தி தோழிக்கு உண்மையை வெளியிடுகின்றாள். மள்ளர் குழிஇய விழவி னானும் மகளிர் தழிஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்டக் கோனே யானுமோர் ஆடுகள மகளே என்கைக் கோடுஈர். இலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலும்ஒர் ஆடுகள மகனே.' (மள்ளர்-வீரர்; மாண் தக்கோன்-மாட்சிமை பொருந்திய தகுதியுடையவன்; கோடு ஈர். இலங்கு வளை-சங்கை அறுத்துச் செய்த விளங்குகின்ற வளையல்கள்; பீடுபெருமை: குரிசில்-தலைவன்) இதில் தன்னோடு துணங்கையாடிய தலைவன் ஒருவன் உளன் என்பதாகத் தலைவி குறிப்பிடுகின்றதைக் காண்க “யானும் ஓர் ஆடுகள மகளே’ என்றது தான் துணங்கையாடியதையும், குரிசிலும் ஓர் ஆடுகள மகனே என்றது. அவன் அத்துணங் கைக்குத் தலைக்கை கொடுத்தான் என்பதையும் புலப்படுத்தித் தோழிக்கு அறத்தொடு நிற்கின்றாள் தலைவி. இத்தகைய தலைவன் ஒருவன் என்னோடு நட்புச் செய்திருப்ப நொது மலர் வரைதல் அறனன்று. ஆதலின் நீ அதனை மாற்ற முயல்வாயாக' என்பது குறிப்பு. - தோழி புலப்படுத்தும் முறை களவில் ஒழுகும் ஐங்குறு நூற்றுத் தலைவி ஒருத்தியின் உடல் வேறுபாடு கண்டு ஐயுற்ற 164. குறுந் 31 அ-11