பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழியிற்கூட்ட மரபுகள் 169 அமைந்துள்ளன. ஐந்திணைக் களவுத் துைறகளுள் இத்துறை முதற் பெருஞ் சிறப்புடையது. இதனாலன்றோ ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்மொழியின் தனி இலக்கிய மதிப்பை அறிவுறுத்த விரும்பிய கபிலர் பெருமான் இத்துறையில் குறிஞ்சிப் பாட்டை யாத்து அழியாப் புகழ் பெற்றார். 8. ஒருவழித்தனத்தல் களவு ஒழுக்கத்திலேயே கருத்தீர்க்கப்பெற்றுப் பகலும் இரவு மாகத் தலைமகன் குறியிடம் போந்து தலைமகளோடு பலகாலம் கூட்டம் நிகழ்த்தி வந்தமையால் அவன்தன் மறைவொழுக்கம் வெளிப்பட்டு அலராக, அஃதறிந்த தலைமகன் தோழியின் விருப் பத்திற்கிணங்கச் சிலகாலம் அவ்வலர் அடங்குமாறு கூட்டம் நீங்கி ஒதுங்கி வேறிடத்துச் சென்று உறைவான். இவ்வாறு தலைவன் தலைவி காணாத நிலையில் நீங்கி நிற்றலை அகப்பொருள் நூல்கள் ஒருவழித்தனத்தல் என்று குறிப்பிடும். தொல்காப்பியர் இதனை இட்டுப்பிரிவு எனக் குறிப்பர்.' தணத்தல் - பிரிந்திருத்தல். இவ்வொருவழித்தணத்தலைத் திருக்கோவையார் பதின்மூன்று துறைகளாகப் பிரித்துப் பேசும்.' நம்பியார் இதனைச் செலவறி வுறுத்தல், செலவுடன்படாமை, செலவுடன் படுத்தல், செலவுடன் படுதல், சென்று.ழிக் கலங்கல், தேற்றியாற்றுவித்தல், வந்துழி நொந்துரைத்தல் என்று ஏழுவகையாகப் பிரித்துப் பேசி' அதன் விரிவாகப் பன்னிரண்டு கிளவிகளைக் கூறுவர். இந்தப் பன்னிரண்டு கிளவிகளையும் மேற்குறிப்பிட்ட ஏழு வகையினுள்ளும் அடக்கிக் காட்டுவர்.”* ஒருவழித்தணந்த ಹಣ6೧ನ ஒருவன் இவ்வாறு கூறுகின்றான் பொழில் தரு நறுமலரே புதுமணம் விரிமணலே பழுதறு திருமொழியே பணையிள வனமுலையே 178. களவியல் - 21. அடி 6 (இளம்) 179. திருக்கோவையார்-ஒருவழித்தணத்தல் முன்னுரை. 180. நம்பி அகப்- 167

18, டிெ - 168