பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

#73 அகத்திணைக் கொள்கைகள் யிட்டவண்ணம் இருக்கும். இடையூறுகளின்றித் தலைவியைத் கூடும் நிலையை ஆராய ஆராய அவன் மனமும் அறிவும் விரிவடையும். இவ்வாறே தலைவியினிடமும் ஏற்படும். தலைவனுக்குத் தலைவியும், தலைவிக்குத் தலைவனும் நீங்கலாக உலகிலுள்ள வேறு எந்தப் பொருளும் அவர்களிடம் இத்துணைப் பேரன்பு விளைத்திடும் என்று கருதுவதற்கில்லை. ஆகவே ஒரு வழித்தணத்தலாலுண்டாகும் பிரிவே அன்பையும் அறிவையும் தக்காங்கு விளைத்தற்குரிய அரியதொரு வாய்ப்பாய் அமைகின்றது. வரைந்து கோடலை எல்லையாகவுடைய களவொழுக்கம் முழுமையிலுமே இந்த ஒருவழித்தணத்தல் என்பதுதான் தக்க பயன் தரவல்ல உண்மைப் பிரிவிலக்கணத்தை உடையதாகும். ஏனெனில், திருமணத்திற்கு முன்பதாக நிகழ்வதாகவுள்ள வரை விடை வைத்துப் பொருள்வயிற் பிரிவு என்னும் மற்றொரு பிரிவு 'திருமணம் செய்து கொள்ளப் போகின்றோம் என்னும் திருமண நோக்கத்துடன் தலைவன் தலைவியர்களிடையே நிகழ்வதால் அஃது அவர்கட்கு ஒருவித அமைதி நிலையைத் தருவதாகுமே யன்றி இப்பிரிவினைப்போல் முன்னர்த் துன்பமும் பின்னர் அதனாலேற்படும் பயனான பெரிய இன்பமும் தருதற்குரிய உண்மையான பிரிவிலக்கணத்தையுடையதன்று. கூடல் இழைத்தல் தலைவன், ஒருவழித்தனந்திருந்த பொழுது தலைவி வருந்தும் நிலைகளையெல்லாம் மணிவாசகப் பெருமான் மிகவும் விளக்கமாக அருளிச் செய்துள்ளனர். இப் பிரிவுக்கு அப்பெருமான் அகன்றணைவு கூறல்’, கடலொடு வரவு கேட்டல், கடலொடு புலத்தல்', 'அன்னமோடாய்தல்', தேர் வழி நோக்கிக் கடலொடு கூறல்’, ‘கூடலிழைத்தல்', 'சுடரொடு புலம்பல்', 'பொழுதுசண்டு மயங்கல், பறவையொடு வருந்தல், பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல்', 'அன்னமோடழிதல்', 'வரவுணர்ந்துரைத்தல்', "வருத்தமிகுதி கூறல்' என்று பதின்மூன்று துறைகளைக் காட்டுவர். இவற்றுள், ஊரவர் அலர் கண்டவுடனே இரவுக்குறியில் தலைவனை அண்மி, நீங்கள் சிலகாலம் தலைவியை அகன்று பின்னர் அணைதல் நன்று என்று கூறுகின்ற 'அகன்றணைவுக் கூறலும், தலைவன் ஒருவழித்தணந்து வந்த பிறகு அவன் வரவினை உணர்ந்து தலைவியின் நிலையினை அவனுக்கு நிலவுக்கு உரைப்பாள்போல் உரைத்தலான வரவுணர்ந்துரைத்தலும், பின்னர்த் தணந்து வந்த தலைவனை நேராக எதிர்ப்பட்டுத் தலைவியின் 'வருத்தமிகுதி கூறலும்'