பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 அகத்திணைக் கொள்கைகள் (தரம் - பாலை நிலம்: நுதல் - நெற்றி) இதில் கன்மகள் அறநெறி இன்தென உணர்ந்து உடன் போயின மைக்கு மகிழ்ந்து அவள் சென்ற பாலை நிலம் தண்ணியதாகுக என்று தந்தாய் வேண்டுவது காண்க. கலித்தொகைத் தலைவி உடன் சென்றதை அறிந்த செவிலி அவளைத் தேடிச் சென்ற பொழுது அவளை இடைச் சுரத்துக் கண்ட முக்கோற் பகவர், இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின் சிறந்தானை வழிபடிஇச் சென்றனள் அறந்தலை பிரியா ஆறும்மற் றதுவே. (இறந்த மிக்க எவ்வம் - துன்பம்; வழிபடீஇ - வழிபட்டு: அறத்தலைப் பிரியா - அறத்திடத்து நின்று நீங்காத ஆறுவழி) t என்று கூறுவதும் அறியப்படும். இக்கூறியவற்றால் அகவிலக்கியம் தமிழ்ச் சமுதாய மனப்பான்மையோடு இயங்குவதைக் கண்டு கிழலாம். இந்த உடன் போக்கினைத் தொல்காப்பியர் "கொண்டுதலைக் கழிதல்' என்றும் வழங்குவர். இவ்வுடன் கோக்குடன் அளவொழுக்கம் முடிவடையும். தொல்காப்பியரும் 'மறை வெளிப்படுதலும்' என உடன்போக்கிற்குப் பின்னர் நிகழும் மறைவெளிப்பாட்டைக் கற்பு முறையின் தொடக்கமாகக் கூறுவர். திருவள்ளுவரும் அலரறிவுறுத்தலுடன் களவியலை ஆடித்துக் கற்பியலைத் தொடங்குதல் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. 第3繫鷺 總 ੋਂ 24. அகத்திணை 14 (நச்). 25. செய்யுளி. 179 இளம்)