பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ll ஐந்திணை-கற்பியல் அகத்திணை யொழுக்கத்தில் களவியலை அடுத்துத் தொடரும் பகுதி கற்பியலாகும். களவியலில் மறைந் தொழுகிய காதலர்கள் ஊரறியத் திருமணம் புரிந்து கொண்டு வாழும் பகுதியே இது. இங்ஙனம் வாழ உரிமை செய்தளிக்கும் முறையே கரணம்: என்பதாகும். காதலர்கள் திருமணம் புரிந்து கொள்ளல் களவு வெளிப் படுவதற்கு முன்னர் வரைந்து கொள்ளல், களவு வெளிப் பட்ட பின்னர் வரைதல் என இருவகைப்படும் என்று குறிப்பர் தொல்காப்பியர், கரணம் காலத்திற்கேற்ப மாறுபடுந் தன்மைத்தாதலின் தொல்காப்பியர் இதனை வரையறுத்துக் கூறிற்றிலர். இதுபற்றிய சில குறிப்புகள் மட்டிலும் பண்டைய இலக்கியங்களில் காணக் கிடக் கின்றன. இல்வாழ்க்கையில் காதலர் ஈடுபட்டிருக்கும் பொழுது அவரிடையே நிகழும் இன்ப உரையாடலைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. இங்குப் பல்வேறு புலவி நுணுக்கங்கள் சுட்டப்பெறுகின்றன. இல்வாழ்க் கையில் கணவன் மனைவியைப் பிரிந்து செல்லும் சந்தர்ப்பங்கள் உள; இவை விரிவாக விளக்கம் பெறு கின்றன. ஐந்திணை யொழுக்கத்தில் தலைவனின் பரத்தமை திங்களில் காணப்பெறும் மறுவையொத்தது. இது விரிவாக ஆராயப்பெறுகின்றது. இறுதியாக, கற்பு ஒழுக்கத்தில் இன்றியமையாதனவாகக் கொள்ளப் பெறும் சில மரபுகள் பட்டியலிட்டுக் காட்டப்பெறு கின்றன. இப்பகுதியில் ஏழு இயல்கள் அடங்கியுள்ளன.