பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு பற்றிய விளக்கம் 197 ஒழுகினராயினும் தலைமகளுடைய பெற்றோர் உடன்பாடின்றி அவ்விருவரும் மணவாழ்க்கையை மேற்கொள்ள இயலாது என்பதும், எனவே அவர்கள் ஒருவரையொருவர் பிரியாது வாழ் தற்குரிய உள்ளத்துறுதியை உலகத்தார் அறிய வெளிப்படுத்தும் நியதியாகிய வதுவைச் சடங்குடன் தலைமகளை மணந்து கொள்ளுதல் மனைவாழ்க்கைக்கு இன்றியமையாத சிறப்புடைய நிகழ்ச்சியாக அமைந்தது என்பதும் பண்டைய வழக்கமாக இருந்து வந்தன என்பது அறியப்படும். இங்ஙனம் உரிமை செய்தளிக்கும் செயல் முறையே பண்டைத் தமிழரின் திருமணச் சடங்காகும். இதனையே ஆசிரியர் தொல்காப்பியர் கரணம் என்ற சொல்லால் வழங்குவர். காதலர்கள் வாழ்வில் திருமணம் என்னும் கட்டுப்பாடு என்றும் யாண்டும் இன்றியமையாதது; மாறாதது. திருமணச் சடங்குகள் (கரணம்) தேயந்தோறும் வேறுபடுவன. காலந்தோறும் கூடு வனவும் குறைவனவும் மயங்குவனவுமாக அமைவ.ை ஆகவே, வாழ்வியல் நெறியை வகுத்த தொல்காப்பியர் கற்பென்னும் தலையாய அறத்தை வலியுறுத்திக் கரணமொடு புணர என்று சடங்கினை விரித்தோதாது பொதுப்படக் கூறினார்; தம் காலத்தும் தம்காலத்துக்கு முன்னரும் தமிழ்ச் சமுதாயம் தழுவிய சடங்குகளை வெளிப்படையாக விதந்தோதிக் குறிப்பிட்ட ஒரு காலத்துச் சடங்குக்கு வழிவழியாக வரும் தமிழரை அடிமைப்படுத்த விரும்ப வில்லை அப்பேராசான். கரணமொடு புணர என்ற பொது நடையால் காலத்திற்கேற்ற நடைமுறைகளை அறிவோடு தழுவிக் கொள்ளத் தொல்காப்பிய வழி வகுத்திருப்பது அறியத் தக்கது. கரணமுறைகளை அவர் விதந்தோதாவிடினும் திருமணத்திற்கு ஏதாவது ஒரு சடங்கு-பலர் அறிய வெளிப்படையான ஒரு மண முறை-வேண்டும் என்பதுவே அவரது துணிபு. கரணமொடு புணர்தல், கொடைக்குரியோர் கொடுத்தல் என்ற கற்புக் கூறுகள் இரண்டனுள் பின்னது இல்லையேனும் முன்னது மிகவும் இன்றி யமையாதது. * கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான." என்ற விதி இக்கருத்திற்கு அரண் செய்வதாக அமைகின்றது. உடன் போகிய இடமே கொடுப்போர் இல்லா இடம், அந்த இடத் 2, ു. - 2