பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முறைகள் *sj; அன்று இதற்கு விதியும் செய்து பச்சை விளக்கு காட்டியுள்ளார். ஆயினும், களவு வெளிப்பட்டபின் த லைவியின் தமர் உடன் பட்டுக் கொடுத்தலே முற்காலத்துப் பெருவழக்கமாக இருந்தது. இது, மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்’ என்ற தொல்காப்பியரின் கூற்றால் தெளியப்பெறும். இது களவின் வழிவந்த மணமாகும். இவற்றால் தமிழ்ச் சமுதாயம் களவொழுக் கத்தை ஒப்பியது என்பதும், ஊக்கியது என்பதும், ஆயினும் களவுக் காதலே முதன்மைக் காதல் என்று தலைமை யளிக்கவில்லை என்பதும், திருமணத்திற்குக் களவே வாயில் என்று ஒரேவழி சுட்ட வில்லை என்பதும் ஈண்டு எண்ணி உணர்தற்குரியவை. மேலும், களவுக்கும் கற்புக்கும் உள்ள தொடர்பையும் மேற்கூறிய செய்திகள் அறிவிக்கின்றன. கற்பு என்பது நல்வாழ்வு என்றும், களவு என்பது அவ்வாழ்வை எய்துவிக்கும் ஒரு நன்னெறியே என்றும் இவற்றால் அறிகின்றோம். மாமயி லன்னார் மறையிற் புணர்மைந்தர் காமம் களவிட்டுக் கைகொள் கற்புற்றென." (மறை-களவு காமச்சிறப்புடைய களவு) என்று நல்லந்துவனார் களவு-கற்பு இவற்றின் தொடர்பைப் புலப் படுத்துவர். களவு கொண்டு விடுதற்குரியது, கற்பு கைக் கொள்ளுதற் குரியது என்று களவின் நிலையாமையையும் கற்பின் நிலையையும் உறவு படுத்திக் காட்டி விளக்குவர். எனவே, கற்பு வாழ்க்கைக்குக் களவு நல்ல தோற்றுவாயே யன்றி இத்தோற்று வாயின்றிக் கற்பியல் அமையாது என்று கோடல் தவறு. நல்ல காதல் வாழ்க்கை களவானே முகிழ்க்கும் என்பது பொருளன்று. எனவே, இறையனார் களவியல் கற்பெனப்படுவது களவின் வழித்தே,' என்று விதி செய்திருப்பது அகத்திணை நெறியன்று என்பது அறியத் தக்கது. - கற்பியலாம் இல்லறம் புகுவதற்கு இருநெறிகள் உள்ளன. ஒன்று களவு நெறி; இது மேலே விளக்கப் பெற்றது. மற்றொன்று மரபு நெறி. இதுவே தொல்காப்பியர் குறிப்பிடும் தமனி ற் பெறுதலாகும். இவற்றுள் களவு நெறியே சங்க இலக்கியத்தில் 15. செய்யுளி - 179 (இளம்). 16. பரிபா-11 அடி 41, 42. 17. இறை. கள-15. அ-14