பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண முறைகள் - 21 | (கழியக் காதல்-மிக்க காதல் வரையின்-மணந்து கொண் டால், எவன்-என்னை; கணம்-கூட்டம்; இகுக்கும்ஒலிக்கும்; கறி-மிளகுக் கொடி, சிலம்பு-மலை, மணப்பு அரும்-எய்து தற்கு அறிய, புணர்ந்தமை-களவொழுக்கம்: மன்றல்-மனம்; என்ற அகப்பாட்டுப் பகுதியில் தொன்றியல் மரபின் மன்றல்' என இயல்பு மணத்தைச் சுட்டியிருத்தலால் மரபு வழித் திருமணமும் உண்டென்று புலப்படுகின்றதன்றோ? காமக் களவினைப் பெற்றோர் அறியா முன்னரே மரபுமன்றல் செய்துவிடல் வேண்டும் என்று தோழி விரும்புகின்றாள். நீடித்த களவின்பம் பழி தருவது என்று தலைவனை இடித்துரைக்கின்றாள். களவு நெறியே நெறியாயின் மகள் களவைப் பெற்றோர் உணர்தலும் உடன் படுதலும் அல்லது கொதித்தெழுதலும் பொருளற்றது. கற்புக்கு வழி இரண்டென்று இருத்தலால் மரபு நெறிப்பூட்ட பெற்றோர் சினந்தெழுந்தனர் என்பதனை அறிகின்றோம். மரபு நாட்டம் பண்டைத் தமிழர்களிடையே ஊறிக் கிடந்தமை குறுந்தொகைப் பாடலும் (374) கலிப்பாட்டும் (41) தெரிவிக் கின்றன. இங்கனம் சங்க இலக்கியங்களில் காணப்பெறும் இத்தகைய பல்வேறு துறைப் பாடல்களையும் அத்துறைத் தோற்றத்திற்குரிய மனப்பாங்குகளையும் நோக்கினால் மரபு நெறிக்கிருந்த நன்மதிப்பு தெளிவாகும். இத்தகை நெறியொன்று நிலவினமையைப் புறப்பாடல்களும் அரண்செய்கின்றன. சங்கச் சான்றோராகிய கபிலர், களவியல் பாடிய காதற் புலவர், பாரி மகளிரை விச்சிகோபாலும் வேள்பாலும் கொண்டு சென்று யான் கொடுப்ப நீ மணந்து கொள்’ என்று இரந்த செய்திகள் மரபு நெறி வழக்கினைப் பறை சாற்றுகின்றனவன்றோ? இது தொல் காப்பியர் கூறும் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே" என்ற தொல்காப்பியர் கூறும் அகத்திணை நெறியுடன் ஒத்துள்ளதைச் சுட்டுகின்றதன்றோ? எனவே, தமிழர் திருமணத்திற்கு களவு நெறியே யன்றி தமர் கொடுப்பக் கொள்ளும் மரபு நெறியும் பழைமையுடையது என்பது அறியப் படும். தொன்று இயல் மரபின் மன்றல் (112) என்ற அகப் பாட்டுத் தொடர் இதனை வலியுறுத்தி அரண் செய்யும். மரபு நெறிக்கு மதிப்பின்றேல் பாரியின் பெருமை சிறுமைபடக் கபிலர் 19. கற்பியல் .