பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 6 அகத்திணைக் கொள்கைகள் |செல்லுதல் - பிரித்துபோதல்; ஒல்வாள் - உடன்படுவாள் ஆயிடை - அவ்வரி: ஆண்மை - ஆளுந்தனமை பூசல - ஈண்டுப் பிரிவுத் துன்பம்.) என்ற அவ்வையார் பாடலில் இருபாலார்க்கும் ஆளுந்தன்மை உண்டு என்பதை அறிகின்றோம். எண்ணத்தைத் திறம்பட ஆளும் உரிமை இருபாலார்க்கும் உரியது என்ற எண்ணம் டைத் தமிழரிடம் ஊறிக் கிடந்தது என்பது இதனால் தெளிகின்றோம். தமிழ்ச்சமுதாயத்தில் தலைவியே இல்லத்தரசியாகத் திகழ்ந் தாள். மனைவி,இல்லாள் என்ற சாதாரணச் சொற்கள் அவளுக்கே உரியவை. இவற்றிற்கு நிகரான ஆண்பாற் கிளவிகள் இல்லாமை இக்கருத்தினை அரண் செய்கின்றது. திருமணச்சடங்கு தலைவன் தன் அகவாழ்வின் உரிமை அனைத்தையும் தன் துணைவிக்கு வழங்கும் ஆவணக்களரியாகும். Better half என்ற ஆங்கிலச் சொற்றொடரும் இக் குத்தின் எதிரொலியையே குறிக்கின்றது. தலைவனது தகாத ஒழுக்கத்தைக் கடிந்து அவனை இடித்துத் திருத்தும் சொல்லுரிமை பெற்றவள் இல்லத்தலைவி. அஞ்ச வந்த உரிமை' என்ற தொல்காப்பியச் சொற்றொடரை நோக்கின் இவ்வுரிமை அறியப்படும். வாயில் வேண்டல், வாயில் மறுத்தல், வாயில் நேர்தல் என்ற அகத்துறைகள் கற்புடைத் துணைவியின் உரிமையிற் பிறந்தவை என்பது நீள நினையத் தகும் கருத்தாகும். இத்தகைய உரிமை தலைவிக்கு வழங்கியிருந்த தமிழ்ச்சமுதாயத்தில் பெண்ணுலகம் ஏற்றம் பெற்றிருந்தது என்று கருதுவதை விட்டு திருமணத்தைப் பெண்ணினத்திற்கு அடிமைப் பொறி வழங்கும் நிகழ்ச்சி என்று கருத்தினை ஏற்றிக் கூறுதல் சிறிதும் பொருந்தாது. காதலர்களின் கள்ளத்தனத்தையும் கணவன் மனைவியைக் கை விடும் போக்கையும் தடுத்து நிறுத்தச் செய்யப்படும் சடங்கே காணம் என்று கருதுவது தமிழ் நாகரிகத்தை இகழ்வதாகும். திருமணச்சடங்கு கற்பாகாது; கற்பினையும் விளைவிக்காது. ஒரம் போகியார் என்ற சங்கப்புலவர் களவுவழி ஒழுகும் குமரி நங்கைக்கு யாய் என்று திருநாமமும் சூட்டிவிடுகின்றார். 'யாயே என வேட்டோளே' என்ற அவர் வாக்கினை நோக்குக. மணந்து மனைவியாகி மகப்பேறு அடைந்து தாயாவாள் என்பதை எண்ணியே இவ்வாறு குறிப்பிட்டனர் போலும். இதன் முதல் 8. கற்பியல் - 5 9. ஐங்குறு - (1–10)