பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

338

அகத்திணைக் கொள்கைகள்


கின்றன. திருவள்ளுவர் பரத்தையரின்றியே ஊடல் துறையை மிக அற்புதமாகப் படைத்துக் காட்டியுள்ளமை அந்நூலில் கண்டு தெளிக.


அகத்திணைத் தலைவி மாசு மறுவற்ற ஒர் அற்புதப் படைப்பு. இவளைக் குறை கூறுவதாக அமைந்த ஒரு பாடலையேனும் காண்டல் அரிது. தலைவனிடம் குறையுள்ளதாகக் கூறும் பாடல்கள் யாவும் பரத்தையொழுக்கம் பற்றியவையே. சமய இலக்கியங்கள் பகவத் காமத்தைப்பற்றிப் பேசும்போது தலைவி (ஆன்மா) தன்னிடம் எல்லாக் குறைகளும் இருப்பதாகக் கூறிக் கொள்வாள். தலைவனோ (பரமான்மா) எவ்வித குறையும் இல்லாத புருடோத்தமனாகப் போற்றிப் புகழப்பெறுவான். இக் கருத்து ஈண்டுச் சிந்தித்து உணரத் தக்கது.