பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 91


தலைவியும், தனிமைத் துயரத்தினால் சிதைவுற்று நெஞ்சம் நலிவாளாயினள் என்க.

46. வண்டு ஊது பனிமலர்!

பாடியவர்: அள்ளுர் நன்முல்லையார். திணை: மருதம். துறை: வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயின் மறுத்தது. இதனை வாயின் மறுத்தது எனவும், செல்லாக் காலைச் செல்கென விடுத்தது எனவும், நச்சினார்க்கினியர் கூறுவர். சிறப்பு: செழியனும் அவனுடைய அள்ளுரும்.

(தன் தலைவன் பரத்தையோடு உறவு கொண்டு தன்னைப் பிரிந்ததற்கு நொந்தாள் தலைவி ஒருத்தி. அவன் வீடு திரும்பிய பொழுது அவள் கூறுகிறாள்:'நும் பரத்தமை பற்றி ஊரவர் கூறுவர். யாம் அதுவும் கூறோம். எம் மெலிவு எம்முடையதே யாகுக. நீர் அங்கேயே செல்க. நும்மைத் தடுப்பவர் யாருமே இலர்!’ என்று. கற்புடைய அவள் நெஞ்சத்தின் குமுறல் இதனாலேயே நன்கு வெளிப்படும்.)

சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலில், நோன்தளை பரிந்து,
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய,
அம்தும்பு வள்ளை மயக்கித் தாமரை 5

வண்டுது பனிமலர் ஆரும் ஊர!
யாரை யோ?நிற் புலக்கேம், வாருற்று,
உறைஇறந்து, ஒளிரும் தாழ்இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப; அஃதுயாம் 10

கூறேம்; வாழியர், எந்தை செறுநர்
களிறுடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளுர் அன்னஎன்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க; 15

சென்றி, பெருமlநிற் றகைக்குநர் யாரோ?

தனக்கு நிற்குமிடமான கொட்டிலைச் சிவத்த கண்களை யுடைய கருத்த எருமையானது சேறாக்கிக் கொண்டது. ஊர் துயின்றிருந்த இரவின் கடையாம வேளையிலே, தனது வன்மையான தளையையும் அறுத்துக்கொண்டது. கூர்மையான முள்வேலியையும் தன் கொம்பினால் நீக்கிற்று. அதன் பின் வெளியேறி, நீர்மிகுந்த வயல்களை நோக்கிச் சென்றது.