பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அகநானூறு -களிற்றியானை நிரை


அதன் திறம் யாதென யானும் தெளிவாக உணரேன். முன்பு ஒரு நாள், பூக்கள் மலிந்துள்ள மலைச்சாரலிலே, என் தோழிமாரோடு, தளைத்த கிளைகளையுடைய வேங்கையின் பூவினைக் கொய்யச் சென்றேன். அவ் வேளையிலே, 'புலி புலி' என்னும் ஒர் ஆரவாரம் அவ்விடத்தே தோன்றிற்று.

மகளிரின் கண்களைப் போன்ற ஒளிபொருந்திய செங்கழு நீர்ப் பூக்களை ஊசியாற் கோத்துச் சுற்றிக் கட்டிய மாலையினை உடையவனாகவும், தலையின் ஒரு பக்கத்தே வெட்சிப் பூவினாலாகிய கண்ணியைச் சூடியவனாகவும், மகளிரின் முலைகள் பாய்வதற்கு உரிய மார்பகத்தில் சிவந்த சந்தனத்தைப் பூசியவனாகவும், வரிந்து புனைந்த வில்லினை ஏந்தியவனாகவும், ஒரு கணையினைத் தெரிந்து கையிலே ஏந்திக் கொண்டிருப் பவனாகவும், ஒருவன் எம்முன் தோன்றினான். 'அந்தப் புலி சென்ற வழிதான் யாதோ?’ என்று எம்மிடத்தே வினவியும் நின்றான்.

அவனைக் கண்டு, எங்களுள் ஒருவர் முதுகிலே ஒருவர் மறைந்து ஒதுங்கி, நாணியவராகப் பேசாதே நின்றோம்.

'கருத்துடன் பேணிய ஐவகையாக வகுத்த கூந்தலினையும், அழகிய் நெற்றியினையும், கரிய நெய்த்த கூந்தலையும் உடைய மடந்தையர்களே! நும்மிடத்தே பொய்யும் உளவாமோ?” என்றனன் அவன்.

மலைநாட்டிற்கு உரியவனாகிய அவன், குதிரைகளின் வேகத்தை அடக்கி மெல்லெனச் செலுத்தும் தேரனாகி, நின் மகளது மையுண்ட கண்களை எதிர்மறுத்துப் பன்முறை நோக்கியவாறே, அவ்விடம் விட்டு மீண்டும் சென்றனன்.

பகற்பொழுது மாய்கின்ற அந்தியாகிய ஞாயிறுமறையும் அப்பொழுதிலே, அவன் மறைந்திடும் திசையையே நோக்கி, நின் மகள், 'தோழியே! இவன் ஒரு சிறந்த மகனே! என்றனள். ஆராய்ந்து அறியும் அறிவு மிகுந்தவர்க்கு, அதனளவாக ஒரு கோட்பாடு உண்டன்றோ? (அதனால் நீயும் இதனை ஆராய்ந்து தெளிவாயாக.)

சொற்பொருள்: 1. வேண்டு - விரும்பு, 4. தெற்றென - தெளிய. 8.இதழ் பூ.1, குயம்-முலை.நீவி- பூசி உதிர்த்து.12.வரி- சித்திரம்; வரிதலும்ஆம். 13. திறம் - வழி. 14. நிற்றந்தோன் - நின்றோன். 15. மெய்ம்மறைபு ஒடுங்கி - முதுகிலே மறைந்து ஒடுங்கி, 24 தேம் - திசை.

விளக்கம்: அவனைக் கண்டதும், "எம்முள் எம்முள் மெய்ம்மறைபு ஒடுங்கி, நாணி நின்றனெமாக' என்று கூறும் மனச்செவ்வியை நோக்கி இன்புறுக. இது தலைவன் ஏத்தல்