பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அகநானூறு -களிற்றியானை நிரை


ரெல்லாம் வந்து கொண்டிருந்தனன். இப்போது, அஃதெல்லாமும் கழிந்ததே! -

'களவுக் காலத்துக் கூடுதற்கு அரிய காமவேட்கையானது நீங்குதலால், தாம் சென்றிருக்கும் இடத்தினின்று இடை வழியைக் கடந்து இங்கு வராதவரான அவர், நமக்கு என்ன உறவினரோ?' என்று சொல்லாது, ஒள்ளிய நெற்றியினையுடைய நின் தலைவியானவுள், இரவிலே, மனையைச் சார்ந்துள்ள பனைமரத்திலே, தம்முள் ஒன்று துணையாகக் கூடியிருப்பதனின்று பிரிந்தாலும், வளைந்த வாயினையுடைய அன்றில்கள் உறங்காதனவாதலைக் காண்பாயாக’ என்று, கண் நிறைந்த நீர்கொண்டு நின் பழியை மறைப்பாள். 'இதற்கு யான் என் செய்வேன்?' என்று, வளம் பொருந்திய பழைமையான அவனுடைய ஊரினிடத்து, மறைந்து சென்று, பாணனே! நீ நம் தலைவனுக்குச் சொன்னால்தான் என்னவோ?'

சொற்பொருள்: கழி - கடற் குட்டம்; காயல் எனவும் வழங்குவர். கடுமீன்-சுறாமீன் முதலியன. கலித்தல்-செருக்குடன் திரிதல். 4. பாணி - தாமத காலம். 6. பயின்று - அடுத்து. 7. மணப்பருங்காமம் - களவுக் காலத்துக் கூடுதற்கு அரிய வேட்கை. 11. வடிவாய் - வளைந்தவாய். 12. ஒன்றுதல் - கூடுதல். ஒன்று துணை பிரியினும், நெடும்பிரிவின்றி இணைந்து ஒன்று தலைப் பிரியினும் துஞ்சா - இரண்டுமே உறங்கா.

விளக்கம்: பகலும் அகலாதிருந்தான் முன்னர்; இப்போதோ பிரிந்து இரவும் வராதிருக்கிறான் என்க. மீன் கலிப்பினும், கெளவை தூற்றினும் வந்தான்; அவை யாதும் இல்லாத இப்போது வாரானாயினான் என்க. "மறையினை சென்று’ - பிறர் அறியாவாறு சென்று. -

தனிமையின் கொடுமையினாலே நலிபவள்,துணை பிரியின் துஞ்சாதாய்க் கூவிக் கலங்கி உயிர்விடும் அன்றிலை நினைக்கின்றாள்; அதனைச் சுட்டி வருந்துகின்றாள் என்பது, இனியும் பிரிவு நீட்டிப்பின் அவளும் அஃதாற்றாதே இறந்துபடுவாள் என வலியுறுத்துவதாம்.

51. மனை முதல் வினை!

பாடியவர்: பெருந்தேவனார்; கடுகு பெருந்தேவனார். பாடியது என்பது வேறு பாடம். திணை: பாலை. துறை: பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.

(பிரிவினால் பொருள் பெறலாமாயினும், அதனினும் பிரியாமலிருந்து இல்லறக் கடமைகளை அவள் மகிழ்வுடன் ஆற்ற