பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அகநானூறு -களிற்றியானை நிரை



சொற்பொருள்: 1. வழக்கு - வழங்குதல்; போக்கும் வரவும். 3 போழ்தல் - ஊடறுத்தல். 5. வெறுவரு அச்சந்தரும். 6. எருவை - பருந்து. 10-11. பிரியாது ஏந்து முலை - இடைவெளியின்றி நெருங்கிப் பணைத்து எழுந்த முலைகள் என்றும் கூறலாம். 11. முற்றம் - பரப்பு. முலை முற்றம் வீங்குதல், களிப்பினால், 13. மனை முதல் - மனைவி; மனைக்கு முதலாக விளங்குபவள் ஆதலால். வினை இல்லறம். *

விளக்கம்: இவளைப் பிரிந்து சென்றால் பொருள் கிடைக்கும் என்பது உறுதியானாலும், அதனை மறந்து, இவளுடன் கூடியிருந்து இல்லறக் கடமைகளில் திளைக்க' என்கின்றான்.

52. பொன்னேர் புதுமலர்!

பாடியவர்: நொச்சி நியமங்கிழார்; மாற்றுர்கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் எனவும் பாடம் திணை: குறிஞ்சி. துறை: 1. தலைமகள் வேறுபட்டமையறிந்த செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நிற்குமெனத் தலைமகள் சொல்லியது.

2. 'சிறைப்புறமாக விட்டுயிர்த் தழுங்கல்’ என நச்சினார்க் கினியரும்; -

3. 'வாழ்க்கை முனிந்து தலைமகள் சொல்லியது' எனப் பேராசிரியரும் காட்டுவர்.

(தன் காதலனுடன் கூடிக்களித்த ஒரு கன்னி, இற்செறிக் கப்பட்டதும், அவனையடைய வழியின்றி மிகவும் நொந்தாள். அவள் வாட்டம் மிகுதியாயிற்று எனினும், தான் உற்ற வருத்தம் காமநோயினால் வந்தது எனக் கூறவேண்டாம் எனச் சொல்லுகிறாள். அவள் பெண்மையின் சிறப்பு அது.)

          'வலந்த வள்ளி மரன்ஓங்கு சாரல்,
          கிளர்ந்த வேங்கைச் சேண்நெடும் பொங்கர்ப்
          பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள்
          இன்னா இசைய பூசல் பயிற்றலின்
          "ஏகல் அடுக்கத்து இருள்அளைச் சிலம்பின் 5

          ஆகொள் வயப்புலி ஆகும்.அஃது" எனத்தம்
          மலைகெழு சீறுர் புலம்பக், கல்லெனச்
          சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
          நெஞ்சுஅமர் வியன்மார்பு உடைத்துஎன அன்னைக்கு
          அறிவிப் பேம்கொல்? அயிலெம் கொல்?"என 10

          இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபாற்
          சேர்ந்தன்று - வாழி, தோழி! - 'யாக்கை