பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 107


வைத்துக் சென்றுகொண்டிருக்கும். அரும்புகள் மலரும் அத்தகைய மாலைக்காலம் இது!

புதியவராகிய மன்னர்கள் பலரும், அரிய கலன்களைத் திறையாகச் செலுத்தியதனால், நம் அரசனும் அவர்மேற் கொண்ட கொடிய பகைமை தணிந்தவனாயினான். இனிய பெயலையுடைய மேகங்களும் முழக்கமிட்டுப் பெய்யத் தொடங்கின. ஒவியத்தைப் போன்ற இந்திரகோபப் பூச்சிகள் செந்நிலத்தே தோன்றுகின்றன. உறுதிவாய்ந்த உருளைகள் பதிந்து உருளும்படியாகத் தேரினை விரையச் செலுத்துவாயாக, பாகனே! - -

தனக்கென்று வாழாமல், பிறருக்கே உரியவனாகத் தான் வாழ்பவனான பண்ணன் என்பானது சிறுகுடியைச் சார்ந்த தோட்டத்திலேயுள்ள, சிறிய இலைகளையும் புல்லிய வித்துக்களையுமுடைய நெல்லியினது, பசுமையான காய்களைத் தின்றவர், பின் நீர் குடிக்கும்போது பெறுகின்ற இனிய சுவையினைப்போல, இனிமையான சொற்களைப் பேசுபவன்;

அரும்பும் நிலவினைப்போல விளங்கும் இளமதிபோன்ற

முகத்தினனும், பொன்னுடைய தாலியினனுமாகிய என் மகன். அவ்வேளையிலே, அவனை நினைந்தாளாக, 'இவ்விடத்தே வருவாயானால், நினக்குப் பால் தருவேன்’ என, ஒருக்கணித்து நோக்கும் பார்வையினளாகத், தன் விரல்களால் அவனை அழைக்கின்றது போலத், தன் உள்ளக் கருத்தை அவனுக்குப் பொய்க்கும், தேமல் படர்ந்த அல்குலினளான, பூங்கொடி போன்ற என் காதலியின் நிலையினைச் சென்று யாம் காண்போம்!

சொற்பொருள்: 1. தெறுப்ப - குவிப்ப. 2. வேந்தன் தான் துணையாகப் போன வேந்தன். 3. ஆர்கலி தலையின்று ஆரவாரத்தோடு பெய்தது. 4. ஒவம் - சித்திரம். 5. உள்ளுறுதல் - பெயலால் நனைதல்.10. கொடுமடி - இலைபறிக்க கட்டிய மடி 11. பின்றை - ஆயத்தின் பின், தூங்க - மெத்தென நடக்க 12.நனைநகு மாலை - மொட்டு மலரும் மாலைக் கண்ணே. 17. முகிழ்நிலா. முகிழ்க்கின்ற நிலா. 18. பொன்னுடைத் தாலி - பொன்னாற் செய்தணிந்த புலிப்பல் தாலி, சிறுகுடி காவிரியின் வடகரை யிலுள்ள ஓர் ஊர்.

விளக்கம்: மகனுக்குப் பொய்த்தலாவது, தன் காதலனின் வரவை எதிர்பார்த்து நிற்குமவள், தெருவிலேயோடும் சிறுவனைப் பால்குடிக்க அழைப்பதுபோல்க் காட்டிப் பொய்த்து நிற்றல்.