பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 113


விழுதானது, பெரிய சருச்சரையையுடைய உருண்டைக் கல்லைத் தீண்டும். அப்போது, காற்றும் அடிக்கவே, பெருங்கையினை யுடைய யானை தன் கையை உயர்த்து இருப்பதுபோல, அது தோன்றும். - மலையிடத்து ஊர்களையுடைய, வெம்மைமிக்க அக் காட்டிலே, நமக்கு நாமே துணையாகத் தனித்திருக்கின்றோம்.

கொய்யப்பெற்ற பிடரிமயிர்களையுடைய குதிரைகள் பூட்டப் பெற்றுள்ளதும், கொடிபரப்பதுமான தேரினை உடையவன் பண்டியன் நெடுஞ்செழியன். அவன், பழமையான கடலின் துறைமுகத்தை உடையதான முசிறியை வளைத்து முற்றினான். பகைவர்களின் போர்யானைகள் மடியுமாறு கொன்றான். கல்லென்னும் பேரொலி எழுந்த அந்தப் போரிலே, அரும்புண்பட்டவர்கள் துடிப்பதனைப் போல, நம்மைப் பிரிந்திருக்கும் நம்முடைய காதலியும் பெரிதும் துடித்துக் கொண்டிருப்பாள், நள்ளிரவிலும் பகல் வேளையிலும் ஓயாது அழுது கொண்டேயும் இருப்பாள்! -

அவளுடைய சிறிய நெற்றியானது முன்னர்க் குளிர்ந்த ஒளிக்கதிர்கள் பரப்பும் பல கதிர்களையுடைய முழுமதி போன்றிருக்கும். ஆராயும் பேரழகு கொண்டும் விளங்கும். அவையெல்லாம் நீங்கிப்போக, இப்போது அது சிறிதான பீர்க்கும் பூவின் நிறத்தையும் கொண்டு விட்டதோ? * சொற்பொருள்: 1.சிறுபைந்துவிச் செங்காற்பேடை என்பது வெளவாலின் பெண் ஆகும். 2. அது வாவிப்பறத்தலால் வாவுப்பறை எனப்படும். வாவல் என்பதே வெளவால் என்றாயிற்று. நெடுநீர் வானம் - நெடிதாகப் பரந்து கிடக்கும் நீர்மையுடைய வானம். 6. உலவை - கொம்பு. 8. நிவப்பு - ஒங்குதல். 9. குன்றவைப்பு - குன்றுகளை உடைய ஊர். 11. பசு நிலா - குளிர்நிலா. 15. முதுநீர் - கடல். 17. அரும்புண் - மருமத்தில் ஏற்பட்ட தீர்தற்கரிய புண்.

10. யாமே தமியமாக என்றது, தன் நெஞ்சம் அவள் பாற் சென்றுவிட்டதனால், தான் தனித்து நோதல்பற்றி.

விளக்கம்: 'நெடுநீர் வானத்து வெயிலவிர் உருப்போடு வந்தும், கனி பெறாது வருந்திப் பழையநாளினை நினைந்து ஏங்கும் வாவற் பேட்டைப்போல, நெடுநாட் சென்று பிரிவால் வருந்திக் காடு கடந்து செல்லும் யானும், பசலை படர்ந்த அவளைக் கண்டு, அவள் பழைய நலன்களை எண்ணி எண்ணி ஏங்குதல்தான் நிகழுமோ?’ என்ற தலைவனின் காதன்மை ஏக்கத்தை உணர்க.