பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

அகநானூறு - களிற்றியானை நிரை


58. பண்பில் வாடை!

பாடியவர்: மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார். திணை: குறிஞ்சி. துறை: சேட்படுத்து வந்த தலைமகனுக்குத் தலைமகள் சொல்லியது. சேட்படுத்து வருதலாவது, புறத்து வேறு வேலையில்லாதபோது, அவளை நாடி வருதல், களவியலுள், 'உயிர் மெலிந்தவிடத்துப் புணர்ச்சி நிமித்தம்’ என்று கூறுவர் பேராசிரியர்.

(தலைவன் குறித்த காலத்தேவராமற்போகவருந்திவாடினாள் அவள். அவன் நெடுநாட் கழித்து வந்தான். அவள் ஊடி நின்றாள். நீர் இப்போது தழுவித்தருகின்ற இன்பத்தினும் அன்று நுமக்காகக் காத்துக் காத்து மெலிந்து நின்றேனே, அந்த நிலை எனக்கு இனிதுகாண்!” என்கின்றாள். இது அவனுடைய காலத் தாழ்ப்பினைச் சுட்டி உரைத்ததாகும்.)

          இன்இசை உருமொடு கனைதுளி தலைஇ,
          மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல்
          காடுதேர் வேட்டத்து விளிவுஇடம் பெறாஅது,
          வாஅதள் படுத்த சேக்கை, தெரிஇழைத்
          தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை, 5

          கூதில் இல்செறியும் குன்ற நாட!
          வனைந்துவரல் இளமுலை ஞெமுங்கப், பல்ஊழ்
          விளங்குதொடி முன்கை வளைந்துபுறம் சுற்ற,
          நின்மார்பு அடைதலின் இனிது ஆகின்றே
          நும்இல் புலம்பின்தும் உள்ளுதொறும் நலியும் , 10

          தண்வரல் அசைஇய பண்புஇல் வாடை
          பதம்பெறு கல்லாது இடம்பார்த்து நிடி -
          மனைமரம் ஓசிய ஒற்றிப்
          பலர்மடி கங்குல், நெடும்புற நிலையே!

கூதிர்க் காலத்திலே,

இனிய இசை முழக்கம்போல இடிமுழக்கிக் கொண்டு பெருமழையும் பெய்யும். நிலைபெற்ற உயிர்கள் அனைத்தும் துயின்றுவிட்ட அக்காலத்து நள்ளிரவிலே, ஆராய்ந்தெடுத்த அணிகளையும், தேன்மணங் கமழுகின்ற கூந்தலினையும் உடைய, இளைய குறத்தியர்களின் தந்தைமார்கள், காடுகளிலே புகுந்து, தாம் வேட்டையாடுவதற்கான விலங்குகளை ஆராய்கின்ற சமயத்திலே, துயிலும் இடம் ஏதும் பெறாததனால், தம் இல்லத்திலே வந்து புலித்தோல் விரித்த படுக்கையிலே தங்கியிருப்பர். அத்தகைய குன்ற நாடனே!