பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

அகநானூறு - களிற்றியானை நிரை


          உரும்எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
          வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளி.இ,
          அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
          அண்ணல் யானை வெண்கோடு கொண்டு,
          நறவுநொடை நெல்லின் நாள்மகிழ் அயரும் 10

          கழல்புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
          மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
          விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்,
          பழகுவர் ஆதலோ அரிதே - முனாஅது
          முழவுஉறழ் திணிதோள் நெடுவேள் ஆவி 15

          பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
          ஒண்கேழ் வனமுலைப் பொலிந்து
          நுண்பூண் ஆகம் பொருந்துதன் மறந்தே.

மனையின் நெடுஞ்சுவரிலே, நம் தலைவன் பிரிந்து போன நாட்களை வரையிட்டு வைத்து, அவ் வரைகளையே நோக்கி நோக்கி உள்ளத்து நோயும் மிகுதியாக, மிக்க துன்பத்திலே ஆழ்ந்திடாதே! தோழி, நீ வாழ்க!

குறித்த இறுதி நாளிலே கூற்றம் வந்து தம் உயிரைக் கொள்ள அதனால் மரியாமல், போரிலே, பிறர் தம் உயிரைக் கொள்ளும்படியாக மரித்தவர்கள் நோன்பு இயற்றியவராவர். இங்ஙனம் எண்ணித், தம் முயற்சியிலே வெற்றி உறுவிக்கக் கருதித், தொலைவான நாட்டிற்குப் பிரிந்து சென்றுள்ளனர் நம் தலைவர்.

பசிய காலும் மாண்புறும் வரியும் உடைய வலிமையான வில்லானது, இடையிடையே சிறிதுகாலம் கூடத் தாழ்க்காமல் தொடர்ந்து முழங்கும் முயற்சியோடு, தம் வில்லிலே வலிய நாணினைப் பூட்டி ஒலித்தவாறே, பகைவரின் மார்புகளிலே அம்பினைப் பாய்ச்சுகின்ற இளைஞர்கள் பலர். அவருடன், தலைமையான யானையின் வெண்மையான தந்தங்களோடு கள்ளினையும் கொண்டு விற்று, அதனாற் கொண்ட நெல்லினால் தனது நாளோக்கச் சிறப்பினைச் செய்பவன் புல்லி என்பவன். அவன், வீரக்கழல் அணிந்த அழகிய திருவடிகளை உடையவன். மிகுந்த வள்ளன்மையும் உடையவன். கள்வர் கோமானாகத் திகழ்ந்தவன், மழவரை வென்று, தனக்குத் திறை செலுத்தச் செய்தவன். அவனுடைய பேரூர் திருவேங்கடம்; அதனையே பெறுவதாயினும்

முழவினையொத்த திண்மையான தோள்களை உடையவன் நெடுவேள் ஆவி. அவனுடையதும், மிகத் தொன்மை வாய்ந்ததும், பொன்மிகுந்ததுமான பொதினிமலையைப்