பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

அகநானூறு -களிற்றியானை நிரை

          சேக்கோள் அறையும் தண்ணுமை
          கேட்குநள் கொல்,எனக் கலுழும்என் நெஞ்சே!
          கேளாய் மகளே! நீ வாழ்வாயாக!

அழகிய நம் வீட்டின் இடமெல்லாம் புலம்புமாறு, நின் தோழியானவள், அவள் காதலனான அவனோடுங்கூடிப், பெரிய மலையினைக் கடந்தும் போயினளே! அதனைப் பற்றிக்கூட யான் அவ்வளவாக வருந்துகின்றேன் அல்லேன்.

அஞ்சாமையினை உடைய யானைகள், தம்முடைய நெடுங்கையினை ஒன்று சேர்த்தவைகளாகத், தம் கால்களை மடக்கி உதைக்க, அதனால் உண்டாகிய பொற்றுகள்போல நிறைந்து கிடக்கும் புழுதியிலே, பெரிய இருளானது புலர்கின்ற விடியற்காலத்திலே, வெய்யில் மிகுதியாக எறிக்கும். கரிப மாலை சூடியது போன்ற கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழ்ச் சேவல், அவ்வேளை, தன்னுடைய சிறிய புல்லிய பெட்டையுடன் கூடியதாக, அப்புழுதியைக் குடைந்து கொண்டிருக்கும். அச்சமுறத்தக்க அத்தகைய காட்டினையும் அவள் கடப்பாளோ?

விரைவு மிகுந்த கால்களை உடைய மறவர்கள் ஆநிரை களைக் கவர்ந்து வருவர். அங்ங்ணம் கொணரும் அவர், தம் ஊர் மன்றுகளிலே ஒருங்கே பல கறவைகளையும் கொணர்ந்து அடைத்திருப்பர். அப்படி அடைக்கப்பட்ட அவை, தம் கன்று களைக் காணாமையால், பொலிவழிந்த கண்ணினவாய்த், தம் செவிகளைச் சாய்த்து, மன்றிலே நிறைவதனால் வந்த துன்பமும் மிகுதியாகக், கல்லென்னும் ஆரவாரத்துடனே கதறிக் கொண்டிருக்கும். அத்தகைய சிற்றுாரிலே, இரவில் அவனுடன் தங்கி,

முதுமை வாய்த்தலையுடைய பெண்டின் தளர்ந்த காலினைப் போல வளைந்து தோன்றும் குடிலினிடத்திலே, இளைய மயிலைப் போன்றவளான, நடையினால் தளர்ந்து போன என் பேதை மகள், அவன் தன் தோளே துணையாக அணைத்து அவளைத் துயில்விக்கவும் துயில மாட்டாளே! வேட்டம் புரியும் கள்வரது, வாரினை இழுத்துக் கட்டிய கடிய கண்ணினையுடைய, ஏறுகளைக் கவர்ந்து கொள்ளுங்கால் அறையப்படுகின்ற பறையின் ஒலியினைக் கேட்டும் அஞ்சாதிருப்பாளோ? இங்ஙனம் நினைந்து நினைந்து அழுகின்ற நெஞ்சினைக் குறித்தே யான் வருந்துகின்றேன்!

சொற்பொருள்: 6 விடிந்த காலத்து வெயில் எறிக்கக்குள்ளக் குடையும் சேவல் என்க.11.பைதல் - துன்பம்.12. கடுங்கான் மறவர் - கடிய கானத்து மறவரும் ஆம், 13 எல்லி - இரவு 14. முதுவாய் - முதுமை வாய்த்தலை உடைய செது கால் தளர்ந்த கால். 18. சேக்கோள் - ஏறுகோள்.