பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 125


விளக்கம்: கறவைகளின் கதறலைக் கேட்டு நடுங்காதவள் ஏறு கொள்ளும் பறையொலிக்கு நடுங்குவாள்; எம் துயரை நினைந்து கலங்காத அவள், தன் காதலனுக்குத் துயர் நேருமோ எனக் கலங்குவாள்' என்க.

64. உடனிலை வேட்கை

பாடியவர்: ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார். திணை: முல்லை. துறை: வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

(படைத்தலைமை பூண்டு வீரர் பலருடன் தொலைவு நாடு நோக்கிச் சென்றவன், அவ்விடத்தே வினைமுடிந்ததும் வீடு திரும்பும் எண்ணம் உடையவனாகின்றான்.விரையச் சென்று தன் காதலியின் துயரைத் தணிக்க வேண்டும் என்ற அவனுடைய ஆர்வ மிகுதியால், பாகனைத் தூண்டுகின்றான்)

களையும் இடனாற்-பாக உளை அணி
உலகுகடப் பன்ன புள்இயற் கலிமா
வகைஅமை வனப்பின் வள்புநீ தெரியத்,
தளவுப்பிணி அவிழ்ந்த தண்பதப் பெருவழி,
ஐது.இலங்கு அகல்இலை நெய்கனி நோன்காழ் 5

வென்வேல் இளையர் வீங்குபரி முடுகச்,
செலவுநாம் அயர்ந்தனம் ஆயிற், பெயல
கடுநீர் வரித்த செந்நில மருங்கின்,
விடுநெறி ஈர்மணல், வாரணம் சிதரப்,
பாம்புஉறை புற்றத்து ஈர்ம்புறங் குத்தி, 10

மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன்நிலை வேட்கையின் மடநாகு தழிஇ,
ஊர்வயிற் பெயரும் பொழுதிற், சேர்புஉடன்,
கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
ஆபூண் தெண்மணி ஐதுஇயம்பு இன்இசை 15

புலம்புகொள் மாலை கேட்டொறும் கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.

பாகனே! உலகத்தையே கடத்தல் வல்லதுபோன்ற பறவையினைப் போல, வேகமுடன் செல்லும், பிடரிமயிரணிந்த செருக்குடைய குதிரைகளைச், செலுத்தும் வகையோடு அமைந்த அழகிய கடிவாள வாரினை நீ ஆராய்ந்து கைக்கொள்ள,

செம்முல்லையின் அரும்புகள் தம் பிணிப்பு அவிழ்ந்த குளிர்ந்த செவ்வியைக் கொண்ட பெருவழியிலே, அழகியதாக