பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 129


'தோழி வாயிலாகச் சென்றுழித் தலைவி வெளிப்படக் கூறுதலும் கொள்க’ என்பர், நச்சினார்க்கினியர்.

(தன்னைப் பிரிந்து பரத்ன்தயரின் மனைநாடிச் சென்றான் தலைவன். தன் மகனைத் தெருவிலே கண்டதும், அவனை அணைத்தான். மகனோ தந்தையை விட்டகல மறுத்தான். அதனால், வீடு புகுந்தான். அந்த நிலையிலே, மகன்பாலுள்ள அன்பினால் பரத்தையுடன் செய்தற்குரிய மணத்தையும் கைவிட்டான். பின் அவன் மீண்டும் பரத்தை பாற் செல்லத் தோழிமூலம் தலைவன் வாயில் வேண்டத் தலைவி கூறுகிறாள்.)

'

இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப.
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்’ எனப்

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
5


வாயே ஆகுதல் வாய்த்தனம் - தோழி!
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியோடு
வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின்
இயன்ற அணியன், இத்தெரு இறப்போன்,

மாண்தொழில் மாமணி கறங்கக், கடை கழிந்து
10.


காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும்
பூங்கட் புதல்வனை நோக்கி, 'நெடுந்தேர்
தாங்குமதி, வலவ!"என்று இழிந்தனன், தாங்காது,
மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவனப்

புல்லிப் பெரும! செல்இனி, அகத்து'எனக்
15


கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், “தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம்'என, மகனொடு
தானேபுகுதந் தோனே யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து,"இவற்

கலக்கினன் போலும், இக்கொடியொன் எனச்சென்று
20


அலைக்கும் கோலொடு குறுகத் தலைக்கொண்டு
இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
பயிர்வன போலவந்து இசைப்பவும், தவிரான்
கழங்குஆடு ஆயத்து அன்றுநம் அருளிய
பழங்கண் ணோட்டமும் நலிய,
அழுங்கினன் அல்லனோ, அயர்ந்ததன் மனனே!

25

தோழியே!