பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 131


போலும் எனக் கண்டார் சொல்லும்படி 18. யான் அதனைச் செய்வித்தேன். தான் மகனை வெளியே செல்ல விடுத்த செயல்.

67. நாணுடை மறவர்!

பாடியவர்: நோய்ப்பாடியார், நொய்ப்பாடியார் எனவும் உரைப்பர். திணை: பாலை, துறை: பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

‘மண்டிலத்து அருமை தலைவன் கூறக் கேட்ட தோழி கூறியது என்பார் நச்சினார்க்கினியர்.

(இன்பத்தைத் துறந்து துன்பத்தை நாடிச் செல்வபவர் எவருமே இலர். ஒரு தலைவன், தன் காதலியின் இன்பத் தைத் துறந்து, துன்பம் விளைவிக்கும் பாலை வழியூடும் பொருள் சுருதிச் சென்றான். அதனை எண்ணி எண்ணிக் கலங்குகிறாள் அவள். தோழியிடம் அவள் கூறுவது இது.)

யான்எவன் செய்கோ? தோழி! பொறிவரி
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறைதுறந்து எழிலி நீங்கலிற். பறைபுஉடன்,
மரம்புல் லென்ற முரம்புஉயர் நனந்தலை:

அரம்போழ் நுதிய வாளி அம்பின்,
5


நிரம்பா நோக்கின்; நிரயம் கொண்மார்,
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல்அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி யதர்தொறும்

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
10

வேல்ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன
உவல்இடி பதுக்கை ஆள்உகு பறந்தலை,

'உருஇல் பேஎய் ஊராத் தேரோடு
15


நிலம்படு மின்மினி போலப் பலஉடன்
இலங்குபரல் இமைக்கும் என்ப - நம்
நலம்துறந்து உறைநர் சென்ற ஆறே!
தோழி!

நமது இன்பத்தைத் துறந்து, நம்மைக் கைவிட்டுப் பிரிந்து போயிருப்பவர் நம் தலைவர். அவர் சென்ற நெறியானது

“பொரிகளும் வரிகளும் உடைய வானம்பாடிப்புள் வாழ்த்திப் பாடும். அங்ங்ணம் பாடியும் அதற்கு அருள் செய்யாது,