பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

அகநானூறு -களிற்றியானைநிரை


என்றெல்லாம் நான் கூறவும், நம் அன்னையானவள் அதனைக் கேட்டறியாளாகப் பெருந்துக்கத்திலேயே அழுந்தி யுள்ளனள். அதன் மேலும், ஏனைய உயிர்களும் அயர்ந்து உறங்கும் பொழுதாகவும் இது உள்ளது. தோழி! நீ வாழ்வாயாக!

'நம் காதலர் வருவாராயின், அதற்கு ஏற்ற பருவம் இதுவே யாகும், என, விட்டுவிட்டு ஒளிவிளங்கும் ஒளியுடையவளை கழன்றிடும் நம்மிடத்துப் படர்ந்தது நம்முடைய உள்ளமும். அஃது பழுதில்லாததாக,

வானிடத்தே இடிமுழக்குடன் பெய்தலைச் செய்தன மேகக்கூட்டங்கள். நீங்குதல் இல்லாத வெள்ளமானது இடந்தோறும் மிகுந்தது. யானைக் கன்றின் கால்களைத் தளரச் செய்து இழுத்துச் செல்லும் கடுஞ்சுழிகளைக் கொண்டது கானாற்று வெள்ளம். அதனால், மெல்லிய தலையினையுடைய இளைய பெண் யானைகளின் ஆர வாரங்கள் பலவாகும். அத்துடன், வெள்ளிய கொம்புகளையுடைய களிறுகள் அவற்றை அழைத்து ஒலித்துக் கொண்டிருக்கும். இவை ஒருசேர ஒலித்துக் கொண்டிருப்பதும், அகன்ற வாயினையுடைய பாம்புகள் செறிந்த செடிகளையுடைய புதர்கள் நிரம்பியதும் ஆகிய, பகற்பொழுதினும் அஞ்சப்படும் மிக்க நடுக்கத்தினைச் செய்யும் கடுமையான சுரநெறியிலே அவரும் நடந்து, கடந்து, நம்பால் வந்துள்ளனர், காண்பாயாக! -

சொற்பொருள்: 3 என்னதும் - ஏதேனும். 5. ஊட்டுதல் - அரக்கு ஊட்டுதல். 7. முதல் - செயலையின் முதல்.11 பருவம் இது - பொழுது இது. தலைத்தலை சிறப்ப மென்மேலும் மிக. 20. பாந்தட் படார் - பாம்புச் செடியுமாம்.

உள்ளுறை: 'யானைகளும் கன்று காரணமாகப் பிடிகள் வருந்திய பின்னரே குரல் எடுக்க முயன்றாற்போல, அவரும் அலரானும் வழியது அருமையானும் யாமும் எம் நலனும் அழிந்த பின்னரே வரைய முயலுமல்லது, முன்பே முயலாரோ? என்க.

69. நீடலர் வாழி தோழி!

பாடியவர்: உமட்டுர்க்கிழார் மகனார் பரங்கொற்றனார். உருஉடுர்க்கிழார் மகனார் பரங்கொற்றனார் என்பதும் பாடம். திணை: பாலை, துறை: பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான் தலைமகன்’ எனக் கவன்ற தலைமகளுக்கு,"வருவர்' என்பதுபடச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது. சிறப்பு: மோரியர் மலையின்கண் தேர் செல்லும் பாதை அமைத்தல்; ஆயின் கானத்துச் சிறப்பு.