பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 135


(தோழி! நின் மேனியின் வாட்டங்களை நோக்கி நீ அழல் வேண்டாம். ஈதல் இன்பம் கருதி வரைகடந்து தொலைநாடு சென்றவர் அவர். நின்னை மறவார். விரைய வருவர்; என்று தலைவியைத் தேற்ற முயலுகிறாள் தோழி)

ஆய்நலம் தொலைந்த மேனியும், மாமலர்த் தகை வனப்புஇழந்த கண்ணும், வகைஇல வண்ணம் வாடிய வரியும் நோக்கி, ஆழல் ஆன்றிசின் நீயே, உரிதினின்

ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்

5

செய்பொருள் திறவர் ஆகிப், புல்இலைப் பராரை நெல்லி அம்புளித் திரள்காய் கான மடமரைக் கணநிரை கவரும் வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,

விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்

10

பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறைஇறந்து அகன்றனர் ஆயினும், எனையதுஉம் நீடலர் - வாழி, தோழி! - ஆடுஇயல் மடமயில் ஒழித்த பீலிவார்ந்து,

தம் சிலைமாண் வல்வில் சுற்றிப், பலமாண்

15

அம்புடைக் கையர் அரண்பல நூறி, நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் சுடர்மணிப் பெரும்பூண் ஆஅய் கானத்துத் தலைநாள் அலரின் நாறும்நின்

அலர்முலை ஆகத்து இன்துயில் மறந்தே.

20

ஆராயும் அழகு தொலைந்துபோன நின் மேனியினையும், கருமலர் போன்ற வனப்பினை இழந்த நின் கண்ணினையும், வகையற்ற வண்ணம் வாடிப்போன நின் தேமல்களையும் நோக்கி நோக்கி, நீ துயரத்திலே ஆழாதிருப்பாயாக தோழியே! நீ வாழ்வாயாக! - -

ஈதலால் வரும் இன்பம் தமக்கும் உரிமையாவதை விரும்பினவராக, அது கைகூடி வருவதற்காகச் செய்யும் பொருள்மேற் சென்றவராயினர் நம் காதலர்.

'சிறு இலையினையும், பருத்த அடியினையும் உடையது நெல்லி மரம். உதிர்ந்து விழும் அதன் காய்களைக் கானத்து மரைமான்களின் இளைய கூட்டங்கள் தின்னும். அத்தகைய வெம்மைமிக்க நெறி அது’ என எண்ணாதும், அவர் மயக்க முற்றனர்.