பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 137


கொடுந்திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென
இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம்பா ராட்டி,
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்

நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
5


அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப்,
பலரும்.ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றைப், புதுவது
பொன்வி ஞாழலொடு புன்னை வரிக்கும்

கானல்அம் பெருந்துறைக் கழனி மாநீர்ப்
10


பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவுஅணி மகளிர் தழைஅணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பெளவம் இரங்கும் முன்துறை,

வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
15


பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்று.இவ், அழுங்கல் ஊரே.

வளைந்த படகினை உடையவர் பரதவர். அவர்க்கு மீன்வேட்டை நன்கு வாய்த்தது. பெரிய புலால் நாற்றங் கமழும் சிறிய குடிமக்களையுடைய தம்பாக்கத்திலே குறுகிய கண்களையுடைய அவ்வலையின் பயனைப் பாராட்டிப் பேசினார்கள். கொழுவிய கண்களையுடைய அயிலை மீனை யாவர்க்கும் பகுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். அத்தகைய கடற்கரைப் பகுதியின் தலைவன் நம் காதலன்.

அவன், நம்முடன் சேர்ந்த காதல் உறவானது, முன்னர் அலர் கூறுதலே வாயின்பயனாக உடைய பெண்டிர்கள் அம்பலாக்கித் தூற்ற, அவ்விடத்தே பலரும் அறிந்ததொன்றாகவும் ஆகியது. அதுவும், இப்பொழுது மணம் கூடிய பின்னர், கழிந்தது.

புலிநகக் கொன்றையின் புதிய பொன்னிறப் பூக்களுடன் புன்னையின் பூக்களும் உதிர்ந்து, தரையிலே ஒவியம் வரைந்தாற் போல அழகுடன் கிடக்கும், கடற்கரைச் சோலையினை யுடையன அழகிய பெருந்துறைகள். கழிகளிலுள்ள கரிய நீரிலே, பசிய இலைகளையுடையதாகித் தழைத்த திரண்ட தண்டினை யுடைய நெய்தற் பூக்களை விழாவிற்கு ஒப்பனை செய்யும் மகளிர் தங்கள் தழையுடைக்கு அழகு செய்யச் சேர்த்துக் கொண்டு மிருப்பர்.

வெற்றி வேலினையுடைய பாண்டியரது, மிக்க பழமை யினையுடைய திருவணைக்கரையின் அருகிலே, முழங்கும்