பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 141


பொன்எறி பிதிரிற் சுடர வாங்கிக்,

குரும்பி, கெண்டும் பெருங்கை ஏற்றை
5

 
இரும்புசெய் கொல்எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அருமர பினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் குருடை முதலைய;
கழைமாய் நீத்தம் கல்பொருது இரங்க,

'அஞ்சுவம் தமியம்' என்னாது, மஞ்சு சுமந்து,
10


ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்,
ஈர்உயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய,
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை
நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த

மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்
15


வாள்நடந் தன்ன வழக்குஅருங் கவலை,
உள்ளுநர் உட்கும் கல்அடர்ச் சிறுநெறி,
அருள்புரி நெஞ்சமொடு எஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த

நீதவறு உடையையும் அல்லை; நின்வயின்
20


ஆனா அரும்படர் செய்த
யானே, தோழி, தவறுஉடை யேனே!

இருளாகிய திரையைக் கிழிப்பதுபோல, மேகங்கள் மின்னலிட்டு மழைத்துளிகளைத் தம்மிடத்தே கொண்டு விளங்கும் பெயலையுடைய அக் கார்காலத்து நள்ளிரவிலே, மின்மினிகள் மொய்த்திருக்கும் முரிந்த இடத்தினையுடைய ஒரு புற்று; இரும்பினைக் காய்ச்சி அடிக்கும் போது சிதறும் பொறிகள்போல அம்மின்மினிகள் ஒளிவிடப் பெயர்த்து அப்புற்றிலே புற்றாஞ் சோற்றினைப் பெரிய கையினையுடைய ஆண்கரடி தோண்டி எடுக்கும். இரும்பு வேலை செய்யும் கொல்லனைப்போல அப்போது அது தோன்றும். அவ்விடமானது செல்லுதற்கும் அரிய தன்மையினை உடையதே.

கான்யாறோ, ஒடக்கோலும் மறையும் பெருவெள்ளம் கற்களிலே மோதி ஒலிக்கக், கருதுவோரையும் நடுநடுங்கச் செய்யும் அச்சமுடைய முதலைகளை உடையனவாகவும் விளங்கும்.

'யாமோ தமியம்; இந் நெறிகளினூடே செல்லுதற்கு அஞ்சுவோம்’ என்றும் எண்ணான். மேகத்தினைத் தலைக் கொண்டு, அசையும் மூங்கில்கள் ஒலிக்கும் தெய்வங்களை யுடைய பக்க மலைகளிலே, கருவுற்றிருக்கும் பெண்புலியின் வேட்கைமிக்க பசியினை நீக்கப் பெரிய ஆண்பன்றியினைக்