பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

அகநானூறு - களிற்றியானை நிரை


கொன்ற, மிக்க சினம் பொருந்திய ஆண்புலியானது, அச்சந்தரும் நல்ல பாம்பு மேய்தற்குச் செல்ல ஒளியுண்டாக உமிழ்ந்து வைத்த மணியாகிய விளக்கொளியிலே, உதிரம் தோய்ந்து காய இழுத்துச் செல்லும்; கூர்மையான கற்களையுடைமையால் வாள்முனையிலே நடப்பதைப் போலவும் விளங்கும்; செல்லுதற்கு அரிய வழியாகிய, நினைப்பவரும் நடுங்கும் கற்செறிவுடைய குறுகலான அக்காட்டு வழியிலே,

நமக்கு அருள் புரியவேண்டும் என்ற உள்ளத்துடன் வேலே துணையாக வந்த தலைவன் கொடியவனும் அல்லன். அவனைக் குறியிடத்தே கொணர்ந்து தந்த நீ தவறுடையையும் அல்லை. நின்பால் நீங்காத அரிய துன்பத்தினை ஆக்கிய யானே தவறுடையவள் ஆவேன்!

சொற்பொருள்: 4 சுடர - மின்மினி ஒளிவிட 8. சூர் - பயம். 9. இரங்க - ஒலிப்ப. 12 வயவுப்பசி - வேட்கைப்பசி, மேய்மணி - மேய்தல் காரணமாக உமிழ்ந்த மணி. 16. கவலை - அருவழி. 19. அருள் - நம்மேல் அருள்.

உள்ளுறை: புலியானது தன் துணையின் பசியைப் போக்குவதற்குப்பிறவற்றுக்குத் தீங்கு செய்யும், பாம்பும் அதற்குத் துணையாகும். அதுபோல, நீயும் குடியோம்பற் செய்தி காரணமாக வரைவொடு வரின், கடுஞ்சொற் சொல்லுகின்ற பலரும், இன்சொற் சொல்லி வரைவுடம் படுவர் என்க.

73. காணிய வம்மோ!

பாடியவர்: எருமை வெளியனார். திணை: பாலை துறை: தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான், குறித்த பருவ வரவுகண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது.

'பிறன்கண் தோன்றிய இழவுபற்றி அவலம் பிறந்ததாம்' என்பர் பேராசிரியர்.

(தலைவியின் காதலனைப் போலவே அவள் தோழியின் காதலனும் பிரிந்தான். குறித்த பருவம் வந்தும் அவர்கள் வரவில்லை. தலைவி தானும் வருந்தினாள்; தன் தோழியின் வருத்தம் கண்டும் கலங்கினாள். அவ்வேளையிலே தோழி இங்ங்ணம் கூறுகிறாள்.)

          பின்னொடு முடித்த மண்ணா முச்சி
          நெய்கனி வீழ்குழல் அகப்படத் தைஇ;
          வெருகுஇருள் நோக்கி யன்ன கதிர்விடுபு
          ஒருகாழ் முத்தம் இடைமுலை விளங்க,
          அணங்குறு கற்பொடு மடம்கொளச் சாஅய், 5