பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

அகநானூறு -களிற்றியானை நிரை

அருந்ததி. 6. தெறுவர - அச்சம்வர 12. அரில் துறு. நாகம் - யானை, 13 வயமான் - வலிய சிம்மம்.

74. வன்புறை இன்சொல்!

பாடியவர்: மதுரைக் கவுணியன் பூதனார்; மதுரைக் கவுணியன் முத்தனார் எனவும் வேறு பாடம் திணை: முல்லை. துறை: தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குச் சொல்லியது.

(அவன் பிரிவால் துயருற்று வருந்தினாள் தலைவி. அவளுக்கு அவன் வருவான் என ஆறுதல் கூறினாள் தோழி. அதற்குத் தலைவி மாலையினால் தான் அடையும் வருத்தத்தைக் கூறித் தன் இயலாமையை உரைக்கின்றாள்.)

          வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து,
          போர்வெல் இளையர் தாள்வலம் வாழ்த்தத்,
          தண்பெயல் பொழிந்த பைதுறு காலை,
          குருதி உருவின் ஒண்செம் மூதாய்
          பெருவழி மருங்கில் சிறுபல வரிப்பப், 5

          பைங்கொடி முல்லை மென்பதப் புதுவீ
          வெண்களர் அரிமணல் நன்பல் தாஅய்,
          வண்டுபோது அவிழ்க்கும் தண்கமழ் புறவில்,
          கருங்கோட்டு இரலைக் காமர் மடப்பிணை
          மருண்டமான் நோக்கம் காண்தொறும், நின்நினைந்து 10

          "திண்தேர் வலவ! கடவு'எனக் கடைஇ.
          இன்றே வருவர்: ஆன்றிகம் பனி'என,
          வன்புறை இன்சொல் நன்பல பயிற்றும்
          நின்வலித்து அமைகுவென் மன்னோ - அல்கல்
          புன்கண் மாலையொடு பொருந்திக், கொடுங்கோற் 15

          கல்லாக் கோவலர் ஊதும்
          வல்லாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே!

நாடோறும் வருத்தத்தைத் தருவது மாலைப்பொழுது வளைந்த கோலினை உடையவரும், தம் தொழிலன்றிப் பிற தொழில்களைக் கற்க விரும்பாதவருமான கோவலர்கள் ஊதும் வலிய வாயினையுடைய சிறு குழலின் ஒசையும், அம்மாலைப் பொழுதுடன் சேர்ந்துவந்து நம்மை வருத்தும். அங்ஙனம் வருத்தாது போனால்,

குளிர்ந்த மழை பொழிந்த பசுமையற்ற காலத்திலே "குருதியைப் போன்ற செந்நிறத்தினையுடைய ஒள்ளிய தம் பலப்பூச்சிகள் பெரிய வழிகள்தோறும் சிறிய பல வரிகளாக