பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

அகநானூறு - களிற்றியானை நிரை



          "அருள் அன்று.ஆக, ஆள்வினை, ஆடவர்
          பொருள்” எனவலித்த பொருள்அல் காட்சியின்
          மைந்துமலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
          எரிசினம் தவழ்ந்த இருங்கடற்று அடைமுதல்
          கரிகுதிர் மரத்த கான வாழ்க்கை, 5

          அடுபுலி முன்பின், தொடுகழல் மறவர்
          தொன்றுஇயல் சிறுகுடி மன்றுநிழற் படுக்கும்
          அண்ணல் நெடுவரை, ஆம்அறப் புலர்ந்த
          கல்நெறிப் படர்குவர் ஆயின் - நல்நுதல்,
          செயிர்தீர் கொள்கை, சில்மொழி துவர்வாய், 10
          
          அவிர்தொடி முன்கை, ஆய்இழை, மகளிர்
          ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்து,
          ஆராக் காதலொடு தாரிடைக் குழையாது
          சென்றுபடு விறற்கவின் உள்ளி, என்றும்
          இரங்குநர் அல்லது, பெயர்தந்து, யாவரும், 15

          தருநரும் உளரோ, இவ்உலகத்தான்?, என -
          மாரி ஈங்கை மாத்தளிர் அன்ன
          அம்மா மேனி, ஐது.அமை நுசுப்பின்:
          பல்காசு நிரைத்த, கோடுஏந்து, அல்குல்:
          மெல்இயல் குறுமகள்! - புலந்துபல கூறி 20

          ஆனா நோலை ஆக, யானே
          பிரியச் சூழ்தலும் உண்டோ,
          அரிதுபெறு சிறப்பின் நின்வயி னானே?'

மாரிக்காலத்தே ஒளிரும் இண்டைச் செடியின் கரிய தளிரையொத்த, அழகிய மாமை நிறத்தையுடைய மேனியினளே! நுண்ணியதாய் அமைந்த இடையினை உடையவளே! பல மணிகள் கோத்த மேகலையினையுடைய, பக்கம் உயர்ந்த அல்குலினை உடையவளே! மென்மைத் தன்மையினையு முடைய என் குறுமகளே!

‘எரியும் தீ பரந்த பெருங்காட்டின் புகுமிடத்தே, இலைகள் கரிந்து உதிரப்பெற்ற மரங்களே விளங்கும் காட்டின் வாழ்க்கையையுடைய, கொல்லும் புலிபோலும் வலிமையும் கட்டப்பெற்ற கழலையும் உடைய மறவர்கள் பழமையாய் வருகின்ற இயல்புடைய தமது கானத்துச் சிற்றுாரிலுள்ள மன்றங்களில், நிழலிடங்களிலே படுத்து, அவ்வெம்மைக்கு ஆற்றாது உறங்குவர். பெருமையையுடைய அந்நெடுமலையிலேயுள்ள, நீரறக் காய்ந்த கல்வழியில், 'உண்மைப் பொருளாவது அருள் அற்றதான ஆள்வினையே யாகும்” என்று