பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

அகநானூறு -களிற்றியானை நிரை

அவனை முற்றவும் பிரிந்து கதறியழ, நான் அவனைக் கைக்கொள்வேன்’ எனச் சொல்லிச் சீறுகிறாள்.)

          மண்கனை முழவொடு மகிழ்மிகத் தூங்கத்,
          தண்துறை ஊரன் எம்சேரி வந்தென
          இன்கடுங் கள்ளின் அஃதை களிற்றோடு
          நன்கலம் ஈயும் நாள்மகிழ் இருக்கை
          அவைபுகு பொருநர் பறையின், ஆனாது, 5

          கழறுப என்ப, அவன்பெண்டிர், அந்தில்
          கச்சினன், கழலினன், தேம்தார் மார்பினன்
          வகைஅமைப் பொலிந்த, வனப்பு.அமை தெரியல்,
          சுரியல்அம் பொருநனைக் காண்டிரோ? என,
          ஆதி மந்தி பேதுற்று இணைய, 10

          சிறைபறைந்து உறைஇச் செங்குணக்கு ஒழுகும்
          அம்தண் காவிரி போல,
          கொண்டுகை வலித்தல் சூழ்ந்திசின், யானே!

மார்ச்சனை செறிந்த மத்தளத்தோடு, காண்பவருக்கு மகிழ்ச்சி பெருகுமாறு யாங்கள் கூத்தாடினோம். தண்மையான நீர்த்துறையையுடைய ஊரன், அதனைக் காண விரும்பி எம் சேரிக்கு வந்தான்! அதற்கே, -

அவன் மனைவி, 'இனிய கடுப்பினையுடைய கள்ளினால் செருக்குற்ற அஃதை என்பானது, யானைகளோடு நல்ல பல அணிகளையும் பரிசிலர்க்கு வழங்கும், மகிழ்ச்சி பொருந்திய நாளோலக்கத்தையுமுடைய அவையிலே செல்லும், கூத்தரது பறைகள் முழங்குவனபோல, ஒயாது என்னையே இகழ்கின்றனள் என்று கூறுகின்றனர். ஆயின், -

'இடுப்பிலே கச்சினையும், கால்களிலே கழல்களையும், தேனொழுகுந் தாரணிந்த மார்பினையும் உடையவன்; கூறு பாட்டின் அமைதியோடு விளங்கும் வனப்புக்கள் அமைந்த மாலைகளை உடையவன்; குழன்ற மயிரினையுடைய அழகிய கூத்தப் பொருநன், ஆட்டனத்தி அவனைக் கண்டீரோ?' என்று, அவன் மனைவியாகிய ஆதிமந்தி மயக்கமுற்றுக் கதறியழக், கரையினை மோதிப் பரவி நேர்கிழக்காக ஒடும் அழகிய குளிர்ந்த காவிரியின் புது வெள்ளம் கைக்கொண்டு போனாற்போல, அவனையும் என்பாற் கொண்டு கைப்பற்றிக் கொள்ளுதலை யானும் கருதியிருக்கின்றேன் என்பதனையும் அவள் அறிவாளாக”

சொற்பொருள்: 1. தூங்க - கூத்தாட 6. கழறுதல் - வைதல். 9. வகை கூறுபாடு. கரியல் - சுருட்டையான மயிர். 9. பொருநன் - கூத்தாடுவோன். 1. சிறை - அணை; கரையுமாம். 13. கைவலித்தல் - கைக்கொண்டு தழுவிப் பிரியாதிருத்தலும் ஆம் ஆடற்றகை