பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 149


யானாதல், பாடற்குரலானாதல் பெற்றேன்’ என்று சொல்லு வாளாயின், இனி இப்படிச் செய்கிறேன் என்றாள்.

விளக்கம்: காவிரி வெள்ளத்திலே தன் கணவனை இழந்து, ஆதிமந்தியானவள் அலறித் துடித்ததைப்போல, என்னிடத்தே அவனையிழத்து, அவன் மனைவியும் அலறித் துடிதுடிக்கச் செய்வேன் என்பது சூள்.

77. பனிவார் கண்!

பாடியவர்: மருதனிளநாகனார். திணை: பாலை. துறை: தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங் குவித்தது. சிறப்பு: சேரர் படைத்தலைவனாகிய பிட்டன் என்பானின் போர்மறம்.

(தானும், 'தன்னொத்த பிறரைப்போல வேற்று நாடு சென்று பொருள்தேடி வரவேண்டும்’ என்று விரும்புகின்றான் ஒரு தலைவன். அவனுடைய குறிப்பினை அறிந்த தலைவி, கண் கலங்கி நொந்து மெலிந்தாள். அப்போது, அவன் தன் நெஞ்சுக்குச் சொல்லித், தான் போவதை நிறுத்திக் கொண்டான். அவன் சொன்னவை.)

'நல்நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன்அருங் கானம் துன்னுதல் நன்று"எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின்,நன்று இன்னாச்
சூழ்ந்திசின் - வாழிய, நெஞ்சே! - வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும் 5

குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்,
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்,
உயிர்திறம் பெயர, நல்அமர்க் கடந்த
தறுக ணாளர் குடர்தரீஇத் தெறுவச், 10

செஞ்செவி'எருவை, அஞ்சுவர இருக்கும்
கல்அதர் கவலை போகின், சீறூர்ப்
புல்அரை இத்திப் புகர்படு நீழல்
எல்வளி அலைக்கும், இருள்கூர் மாலை,
வானவன் மறவன், வணங்குவில் தடக்கை, 15

ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த
திருந்து இலை எஃகம் போல,
அருந்துயர் தரும்.இவள் பனிவார் கண்ணே!

என் நெஞ்சமே! நீ வாழ்வாயாக!