பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/167

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 153


சொற்பொருள்: 2 இனம் தலைத்தரும் தன் இனத்தைத் தன் தலைமையின் கீழே கூட்டிக் கொள்ளும். 4. ஒருத்தல் - தலைவன். 7. தேம் - இனிமை, தேனுமாம். தேனாற் பிழிந்து ஆக்கிய மதுவென்க, 8. முந்துாழ் - மூங்கில் 10. அற்சிரம் - பனிக்காலம்.

விளக்கம்: 16. 'கபிலன்சூழ’ என்பது, மூவரும் பறம்பினை முற்றியிருப்ப, உணவற்ற காலத்தே கிளிகளை வளர்த்துக் கதிர் கொண்டுவரச் செய்து, கபிலர் பசிபோக்கினர் என்பது.

'களிறு தன்னை அணைத்துக் காத்து நிற்பவும், பிடியானது ஆளியை நினைந்து அஞ்சி நடுங்கினாற்போல, நீயும் இவளைக் காத்துப் பேணுகின்ற இயல்பினையுடைய என்றாலும், நின் பிரிவுக்கு அஞ்சி இவள் வாடினள்' என்பது உள்ளுறை பொருள்.

'நெற்றியினை நினைத்தும் அறிதிரோ' எனக் கேட்டாள், அதன் அழகு ஒழியக் காரணமாகிப் பிரிந்து போதலின் கொடுமையைக் கூறுதற்கு

79. வல்லாங்கு வருதும்!

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார். திணை: பாலை. துறை: பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: கொங்கு நாட்டார் தம் ஆக்களுக்கு நீர்தரும் பொருட்டு மலைப்பகுதிகளிலே வெட்டிய கிணறுகள்.

(உள்ளம் பொருளார்வத்தைத் தூண்டத் தலைவியைப் பிரிந்து பாலைவழியிலே சென்று கொண்டிருந்தவன், இடை வழியிலே தன் தலைவியின் எண்ணம் தம் நெஞ்சினை ஆட் கொள்ள இவ்வாறு கூறுகின்றான்)

தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்
கனைபொறி பிறப்ப நூறி,வினைப் படர்ந்து
கல்லறுத்து இயற்றிய வல்உயர்ப் படுவில்,
பார்உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன்புலம் துமியப் போகிக், கொங்கர் 5

படுமணி ஆயம்நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்தசெந்நிலக் குரூஉத் துகள்
அகல்இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்ப,
'வல்லாங்கு வருதும் என்னாது, அல்குவர 10

வருந்தினை வாழிஎன் நெஞ்சே! - இருஞ்சிறை
வளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடை,