பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

அகநானூறு -களிற்றியானை நிரை


ஒரே இனமாக விளங்கும் மணிகள் பூண்ட குதிரைகள் பூட்டிய நின் நெடுந்தேரினை, அங்ஙனம் செலுத்தியவனாக, ஒளிரும் இலைகளால் அழகுற்று விளங்கும் மலர்ந்த பூங்கொத்துக்கள், பொன் போலும் தன்மையான நறும்பூந் தாதுக்களைத் தம் கட்டவிழ்ந்து சொரியும், புன்னை மரங்கள் செறிந்த அழகிய கானற்சோலையிலே, இனிப் பகல்வேளையிலேயே வருவாயாக!

எம் தந்தை, பொருந்தும் அலைகளையுடைய கடல் அகத்தேயிருந்து துழாவிக் கொணர்ந்த, பலவகை மீன்களின் வற்றலிலே வந்து படியும் புட்களை, யாம் அவ்வேளை அங்கே ஒட்டியிருப்போம்.

ஆகலின், யாங்கள் நினக்கு எங்ஙனம் கூடுதற்கு அரியவர்களாவோம்?

சொற்பொருள்: 7, அடைகரை கரையடியில் 11, அவிழ்தல் - மலர்தல், பகற்குறி வாயாமையாலேயே அவன் இரவுக் குறி நேர்ந்தான்; இப்போது அதுவும் மறுத்தனள் தோழி; அதனால், விரைந்து வந்து மணந்து கொள்வாயாக என்பது கருத்தாகும்.2 இட்டுச் சுரம் - குறுகிய வழியினையுடைய சுரம்

81. உளியத்தின் நாளுலா!

பாடியவர்: ஆலம்பேரிச் சாத்தனார். திணை: பாலை, துறை: பிரிவுணர்த்திய தலைமகனுக்குத் தோழி தலைமகள் குறிப்பறிந்து வந்து சொல்லியது. சிறப்பு: கடலன் என்பான்.

(பொருள்வயிற் பிரியக் கருதியவனாகிய தலைமகன், அதனைத் தலைவியினிடம் கூறுதற்குத் தோழியின் உதவியை நாடுகின்றான். அவள், அவன் கருத்தைத் தெரிவித்து, அதனைக் கேட்டத் தலைமகள் பட்ட துயரங்களை, அவனிடம் மீண்டும் வந்து சொல்லுகிறாள்.)

          நாள் உலா எழுந்த கோள்வல் உளியம்
          ஓங்குசினை இருப்பைத் தீம்பழம் முனையின்,
          புல்அளைப் புற்றின் பல்கிளைச் சிதலை
          ஒருங்கு முயன்று எடுத்த நனைவாய் நெடுங்கோடு
          அரும்புஊது குருகின், இடந்து, இரைதேரும் 5

          மண்பக வறந்த ஆங்கண் கண்பொரக்
          கதிர்தெறக் கவிழ்ந்த உலறுதலை நோன்சினை
          நெறிஅயல் மராஅம் ஏறிப், புலம்புகொள்
          எறிபருந்து உயவும் என்றுழ் நீள்இடை
          வெம்முனை அருஞ்சுரம் நீந்திச் - சிறந்த 10