பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 157


செம்மல் உள்ளம் துரத்தலின், கறுத்தோர்
ஒளிறுவேல் அழுவம் களிறுபடக் கடக்கும்
மைஎழில் உண்கண் கலுழ

ஐய! சேறிரோ, அகன்றுசெய் பொருட்கே? .
15

ஐயனே! சிறந்த தலைமை வாய்ந்த நுமது உள்ளமானது எம்மைப் பிரிந்து சென்று, ஈட்டும் பொருளுக்குச் செல்லுமாறு, நூம்மைத் தூண்டுதலினாலே,

வெகுண்டு போருக்கு எழுந்த பகைவரது, ஒளிர்கின்ற வேல்களையுடைய போர்க்களத்திலே, களிறுகள் மடியுமாறு வீழ்த்தும் ஆற்றலுடையவனும், மிக்க வண்மையுடைய வனுமாகிய கடலன் என்பவனது, விளங்கில் என்னும் ஊரினைப் போன்ற, எம்முடைய அழகிய மையுண்ட கண்ணினளான தலைவியானவள், அழுது புலம்ப,

தனக்குரிய இரையினைப்பற்றிக் கொள்ளுதலிலே வல்லதான கரடியானது, தன்னுடைய நாள் வேட்டைமேற் செல்லுவதற்கு எழுந்து, உயர்ந்த கிளைகளையுடைய இருப்பைமரத்தின் இனிய பழமானது வெறுத்துப் போயின

தென்றால், கரையான் தன் நனைந்த வாயால் ஒருங்க கூடிப் பல

கிளைகளாகக் கட்டிய, புல்லிய வளைகளையுடைய புற்றினது நெடிய உச்சியினை, இருப்பு உலையிலே ஊதும் துத்தியைப் போன்று ஊதிப் பெயர்த்து, ஆங்குள்ள புற்றாஞ்சோறாகிய இரையினை எடுத்து உண்ணும். மண்பிளவுபட கோடை எரிக்கும் வறட்சியுற்ற பாலை நிலமாகிய அவ்விடத்திலே,

கண்கள் கலங்குமாறு கதிரவன் எரித்தலால், நெறியின் அயலிடங்களிலேயுள்ள வெண்கடம்புகளின் கவிழ்ந்திருக்கும் காய்ந்த உச்சியினையுடைய உயர்ந்த கிளைகளிலே ஏறித், தன் இரையினைப் பாய்ந்து எடுக்கும் பருந்தும், ஏதும் கிடையாதே தனித்திருந்து வருந்தும், மிகுதியான வெப்பம் நெடுகப் பரக்கும் இடங்களாகிய வெவ்விய முனைகளையுடைய அரிய சுரத்தினைத் தாண்டி,

நீரும் பிரிந்தவராகச் செல்லுவீரோ? (வேண்டாங்கான் என்பது தேற்றம்)

சொற்பொருள்: 1. உலா - உலாவி. எழுந்த எழுந்திருந்த, 5. குருகு - கொல்லன் உலையின் துருத்தி முனை. 6. கண்பொர கண் பார்க்க முடியாதபடி கூச. 9. எறிதல் - பாய்ந்து எடுத்தல். 12. வேலழுவம் - வேற்பரப்பினையுடைய போர்க்களம்.

விளக்கம்: இனிய இருப்பைப் பழத்தை வெறுத்து, வலிய முயற்சியான புற்றாஞ்சோறு எடுத்தலை மேற்கொள்ளும் வலிய கரடியினைப்போல, நீரும், இனிய நும் தலைவியைப் பிரிந்து,