பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/172

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

அகநானூறு - களிற்றியானை நிரை

நிலையற்ற பொருளை நாடி, வலிதின் முயன்று செல்லுவீரோ என்பதாம்.

82. விறலியின் தோன்றும் மயில்!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: தோழிக்குத் தலைவி அறத்தோடு நின்றது. -

'தன் கருத்து வெளிப்படாது தன் மெய்க்கட்டோன்றிய புதுமையைத் தலைவி வியந்தாள் போலத் தோழிக்கு அறத் தொடு நின்றது. ‘புலர்குரலேனல்.ளேனே என்பது, கண் துயில் மறுத்தல் என்னும் மெய்ப்பாட்டிற்கு உதாரணமாயிற்று என்பர் பேராசிரியர்.

'அவனை ஆயத்தார் பலரும் கண்டாரென வந்தோன் முட்டியவாறும், அவருள் நெகிழ்தோளோன் யானே எனத் தானே கூறியவாறும் காண்க, என்பர் நச்சினார்க்கினியர்.

(காதல் பிறக்கும் அதிசயத்தை வருணிப்பது இப்பாடல். பல பெண்கள் ஒருவனைக் கண்டபோதும், அவன்பால் ஒருத்திக்கு மட்டுமே உள்ளத்து ஈடுபாடு மிகுதியாகின்ற விசித்திரத்தை விளக்குகிறது இந்தப் பாடல். இயற்கையின் அமைதி எங்ஙனம் அதற்கு உதவுகிறதென்பதும் இதன்கண் காணலாம்.)

          ஆடுஅமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
          கோடை அவ்வளி குழலிசை ஆக,
          பாடுஇன் அருவிப் பனிநீர் இன்இசைத்
          தோடு.அமை முழவின் துதைகுரல் ஆகக்
          கணக்கலை இகுக்கும் கடுங்குரற் றும்பொடு 5

          மலைப்பூஞ் சாரல் வண்டுயாழ். ஆக,
          இன்பல் இமிழ்இசை கேட்டுக், கலிசிறந்து,
          மந்தி நல்அவை மருள்வன நோக்கக்
          கழைவளர் அடுக்கத்து, இயலி ஆடுமயில்
          நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன்! 10

          உருவவல் விற்பற்றி, அம்பு தெரிந்து,
          செருச்செய் யானை செல்நெறி வினாஅய்ப்,
          புலர்குரல் ஏனற் புழையுடை ஒருசிறை,
          மலர்தார் மார்பன், நின்றோற் கண்டோர்
          பலர்தில், வாழி - தோழி - அவருள், 15

          ஆர்.இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
          ஓர்யான் ஆகுவது எவன்கொல்,
          நீர்வார் கண்ணொடு, நெகிழ்தோ ளேனே?

தோழி! வாழ்வாயாக!