பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/180

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

அகநானூறு - களிற்றியானை நிரை



          இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்
          செஞ்சூட்டு ஒணகுழை வண்காது துயல்வா
          அகமலி உவகையள் ஆகி.முகன் இருத்து,
          ஓய்யென இளைஞ்சி யோளே-மாவின்
          மடம்கொள் மதைஇய நோக்கின் 30
          ஓடுங்குஈர் ஒதி, மாஅ யோளே.

உழுந்தினை நிறைக் கூட்டிச் சமைத்த, குழைவாக வெந்த, உளுத்தம் பருப்புப் பொங்கலின் பெரிய உருண்டைகளைக் கூடியிருந்தவர் உண்பது இடையறாது நிகழ்ந்து கொண்டே யிருந்தது. வரிசையாகிய கால்களிட்டு அமைத்த பெரிய பந்தரும் விளங்கிற்று. அதன்கீழ்த் தரையிலே மணலைக் கொணர்ந்து பரப்பி இருந்தனர். மனைவிளக்கினை ஒருபால் ஏற்றி வைத்திருந்தனர். எங்கும் மாலைகளைத் தொங்கவிட்டிருந்தனர். தீய கோள்களின் தொடர்பு நீங்கிய, வளைந்த வெண்மையான சந்திரனைக், கேடற்ற சிறந்த புகழையுடைய உரோகணி என்னும் நாள் வந்து அடைந்த, நல்ல நாள் அது. அந்நாளிலே, மிக்கிருந்த இருளும் நிங்கி எங்கும் அழகு மலரும் புலர்காலை வேளையும் வந்தது. உச்சியிலே நிறைநீர்க் குடத்தினை உடையவராகவும், கைகளிலே புதிய மண் கலயங்களை உடையவருமாக, மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய மங்கல மகளிர்கள், கூடினர். முன்னே தருவனவும், பின்னே தருவனவும், அவர்கள் முறை முறையாகத் தந்து கொண்டிருந்தனர். -

மகனைப் பெற்றெடுத்த, தேமல் பொருந்திய அழகிய வயிற்றினையுடைய துய அணிகளனிந்த மகளிர்கள் நால்வர் கூடி நின்றனர், ‘கற்பினின்றும் வழுவாது, நன்றாகிய பல வகைகளினும் உதவியாக நின்று, நின்னை மனைவியாகப் பெற்ற நின் மணவாளனைப் பேணிக் காக்கும் துணைவியாக நீ ஆவாயாக!' எனக்கூறி அவளை வாழ்த்தினர். நீரோடு, குளிர்ந்த இதழ்களையுடைய பூக்களையும் நெல்வினையும் கலந்து அவள் தலையிலே தூவினர். மிக்க கரிய அவள் கூந்தலிலே, அவை ஒருங்கே சேர்ந்து கிடந்தன. அங்ஙனம், மங்கல நீராட்டியபின், வதுவை மணமும் நிகழ்ந்து முடிந்தது. அதன் பின்னர்,

சுற்றத்தார் எல்லாரும், கல்லென்ற ஒலியினராய், விரைவோடும் வந்தனர். 'பெருமைக்கு உரிய இல்லக்கிழத்தி ஆவாய்' என, அவளை எனக்கு அளித்தனர். அதனையடுத்து, ஒர் தனி அறையிலே, நாங்கள் உடன்கூடிய புணர்ச்சிக்குரிய, முதல் இரவு வேளையும் வந்தது. அங்கே, -