பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 167


முதுகினை வளைத்துக் கொண்டவளாகக், கோடிப் புடவைக்குள்ளே அவள் ஒடுங்கிக்கிடந்த, மலரணையினைச் சார்ந்து, அவள் முதுகினைத் தழுவிக்கொண்டேன். அவளை அணைத்து மகிழ்கின்ற விருப்பத்தோடு, அவள் முகத்தைப் புதைத்திருந்த கைகளை மெல்லெனத் திறந்தேன். அஞ்சின வளாக, அவள், பெருமூச்சு உயிரித்தனள். அவ்வேளையிலே, “நின் உள்ளத்திலே கருதியிருப்பதனை ஒளியாமற் சொல் வாயாக’ என்று, அதன்பின் யானும் அவளை வினவினேன்.

இனிய மகிழ்வுடன் கூடிய, அம் மலரணையிலே, மாமை நிறத்தினையுடைய அவள், மானின் மடப்பத்தினைக் கொண்டதும், மதர்த்த நோக்கினை உடையதுமாகிய தன் கண்கள், குளிர்ந்த தன் கூந்தலினிடத்தே ஒடுங்கிய, சிவந்த மணிகள் பதித்த ஒள்ளிய குழை வளவிய காதின்கண் சென்று அசைய உள்ளத்திலே மிக்குப்பொங்கிய மகிழ்வினள் ஆக, முகத்தினை என் பிடியினின்றும் விலக்கி இழுத்துக் கொண்டு, ஒய்யெனத் தலைகவிழ்ந்தும் நின்றனள்!

சொற்பொருள்: 1. களிமிதவை-குழைதலையுடையதும் மாயமும் ஆம். 2. அமலை நிற்ப என்றான், உண்பவரின் இடையறாமைபற்றி, 9. பொது-திருமணம் சமூகப் பொது விழாவாதலால், அதனை நிகழ்விப்பவராகிய பெண்டிர் என்க. 11-12. பிள்ளைபெற்ற மகளிர் நால்வர் கூடிக் குளிப்பாட்டிப் புத்தாடையணிதல் மரபு. 15 வதுவை நன்மணம்-குளித்து விட்டபின் நிகழ்வது, 20. உடன் புணர்தல்-கூடிப்புணர்தல்.

5. 'கனையிருள் அகன்ற'. என்றது, பூர்வபட்சத்தையுடைய காலை 21. கொடும்புறம் நாணமிகுதியால் கூனிக்கிடந்த உடம்பு. 30. மதைஇய நோக்கு செருக்கின நோக்கு. Ať

விளக்கம்: 'எக்காலத்துமவள் என்னளவில் அன்புடைய வளே, அவளறிவது ஒன்றுண்டோ? உன் கொடுமையல்லவோ இந்த மாறுதல்?’ எனத் தோழியோடு புலந்தான் எனக் கொள்ளுமாம். -

'இதனுள், வதுவைக்கு உரிய கரணங்கள் நிகழ்ந்தவாறும், தமர் கொடுத்தவாறும் காண்க. சுற்றஞ் சூழ்ந்து நிற்றலானும், தமர் அறிய மணவறை சேறலானும், களவாற் சுருங்கிநின்ற நாண் சிறந்தமையைப் பின்னர்த் தலைவன் வினாவ, அவள் மறுமொழி கொடாமையைத் தலைவன் தோழிக்குக் கூறியவாறும் காண்க இதனானே, இது களவின்வழி நிகழ்ந்த கற்பாயிற்று என்றும், சரணத்தின் அமைந்து முடிந்தது என்றும், நச்சினார்க்கினியர் விளக்கிக் கூறுவர்.