பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/184

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

அகநானூறு - களிற்றியானை நிரை



(இரவுக்குறியிடத்தே, தலைமகன், தலைமகளைக் கூடிப் பிரிபவன், சிறைப்புறத்தே ஒதுங்கியிருப்பத், தோழி இவ்வாறு சொல்லுகிறாள். கானவர் அறிய நேரலால் களவு வெளிப்படும்’ என்பதும், காட்டின் ஏதம் கருதித் தாம் அஞ்சினம்’ என்பதும் புலப்பட, அவன் விரைந்து வந்து தலைவியை வரைந்து கொள்வதை வலியுறுத்துகிறாள் தோழி)

          முதைச்சுவற் கலித்த மூரிச் செந்தினை
          ஓங்குவனர்ப் பெருங்குரல் உணிஇய, பாங்கர்ப்
          பகுவாய்ப் பல்லி பாடுஓர்த்துக் குறுகும்
          புருவைப் பன்றி வருதிறம் நோக்கி,
          கடுங்கைக் கானவன் கழுதுமிசைக் கொளிஇய 5

          நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்து,நம்
          நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன்
          சென்றனன் கொல்லோ தானே-குன்றத்து
          இரும்புலி தொலைத்த பெருங்கை யானைக்
          கவுள்மலிபு இழிதரும் காமர் கடாஅம் 10

          இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ்செத்து,
          இருங்கல் விடர்அளை அசுணம் ஓர்க்கும்
          காம்புஅமல் இறும்பில் பாம்புபடத் துவன்றிக்,
          கொடுவிரல் உளியம் கெண்டும்
          வடுஆழ் புற்றின வழக்குஅரு நெறியே! 15

பழங்கொல்லையாகிய மேட்டு நிலத்திலே கொழுத்த செந்தினைப் பயிரானது தழைத்திருக்கும் இளமை பொருந்திய காட்டுப் பன்றியானது, அதன் உயர்ந்து வளைந்த பெரிய கதிரை உண்பதற்காகப் பிளந்த வாயினையுடைய பல்லி நல்ல பக்கத்தே ஒலித்ததான நல்ல நிமித்தத்தையும் உணர்ந்து, கொல்லையினை அணுகி வரும். வலிய கையினையுடைய கானவன், அப்படிப் பன்றி வருகின்ற வருகையினை எதிர் நோக்கியாவறு, அதனை ஒட்டுதற்குப் பரண்மீது நீண்ட பந்தங்களைக் கொளுத்தி வைத்திருப்பான். அந்தப் பந்தங்களின் ஒளியினைப் பார்த்துப் பார்த்து, நம் நடுக்கத்தைத்தரும் துயரினை ஒழித்த, நன்மையாளனாகிய நம் தலைவனும், காட்டைக் கடந்து வந்தனன்.

குன்றின்கண் உள்ள பெரும்புலியைக் கொன்ற, பெரிய கையினையுடைய யானையினது கன்னத்தினின்று பெருகி வழியும் அழகிய மதநீரிலே, கரிய சிறகினையுடைய வண்டினம் மொய்க்கும். அதனை யாழிசை எனக்கருதிப், பெரிய மலைப் பிளவுகளிலேயுேள்ள அசுணங்கள் உற்றுக் கேட்கும். மூங்கில் நிறைந்துள்ள அச் சிறுகாட்டிலே, வளைந்த விரல்களையுடைய கரடியானது, உள்ளிருக்கும் பாம்பும் இறந்துபடுமாறு, வடுக்கள்