பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 171


பொருந்திய புற்றுக்களைத் தோண்டிக் கொண்டிருக்கும். அத்தகைய, செல்லுதற்கரிய நெறியின்கண்ணே, அவன் மீண்டும் சென்றனனோ?

சொற்பொருள்: 1. முதைச் சுவல்-தொன்மையான தினைக்கொல்லை. மூரித்தல்-கொழுத்தல் வணர்ப் பெருங்குரல். தானிய மிகுதியால் தலைவளைத்து கிடக்கும் பெரிய தினைக்கதிர். 3. பாடு-ஒலி. 4. புருவை-இளமை. 5. கழுது-பரண். பன்றி, பல்லி நிமித்தம் பார்த்து வந்தாலும், காவலிருக்கும் கானவனுக்குத் தப்பாது என்பது கருத்து. 6. அச்சுடரே வொளியாகப் பார்த்து. 11. தொழுதி-கூட்டம்.

விளக்கம்: 'தினை நுகர்தற்குப் பன்றி நிமித்தம் பார்த்து வரினும், கானவன் அது வருந்திறமறிந்து சுடர் கொளுத்தினாற் போலத் தாமும் விழிப்புடன் வந்தனரேயாயினும், காவலர் அறிய, அவர் வரவும் வெளிப்படும் எனக் கருதிக் கலங்கினாள்

'மதயானையும், அசுணமும், பாம்பின் புற்றும், கரடியும் உடைய கொடுநெறியிற் செல்கின்றனனோ என வழியின் ஏதங் கருதியும் நொந்தனள் என்க.

கேட்ட அவன், விரைந்து வரைந்து கொள்ளல் வேண்டும் என்பது பயன். "கரடி புற்றாஞ்சோறாகிய தன் இரையினை உண்ணும் தன் காரியஞ் செய்யப், பாம்பு துயருற்றாற்போல, அவர் தம் காரியமாகிய களவின்பத்தையே நாடிவர, எழும் ஊரலரால் யாமும் துயருற்றோம் எனவும் உரைக்க,

89. வல்லுநள் கொல்லோ!

பாடியவர்: மதுரைக் காஞ்சிப்புலவர்.திணை:பாலை துறை: மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

(செல்லமாக வளர்த்த தன் மகள், தன் காதலனுடன் உடன்போக்கிலே சென்றுவிட, அதனை நினைந்து நினைந்து வருந்துகின்றாள் செவிலித்தாய். காட்டின் கொடுமைகளைத் தன் கண்முன் நிறுத்தி, அவள் மெல்லிய பாதங்கள் எங்ங்ணம் அவ்வழியைக் கடந்து செல்லுமோ? எனவும் கலங்குகிறாள்.)

தெறுகதிர் ஞாயிறு நடுநின்று காய்தலின்,
உறுபெயல் வறந்த ஒடுதேர் நனந்தலை,
உருந்துஎழு குரல குடிஞைச் சேவல்,
புல்சாய் விடரகம் புலம்ப, வரைய
கல்லெறி இசையின் இரட்டும் ஆங்கண்,

5