பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

அகநானூறு - களிற்றியானை நிரை



          சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து
          ஊழுறு விளைநெற்று உதிரக், காழியர்
          கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழியக்,
          களரி பரந்த கல்நெடு மருங்கின்,
          விளர்ஊன் தின்ற வீங்குசிலை மறவர் 10

          மைபடு திண்தோள் மலிர வாட்டிப்,
          பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய
          திருந்துவாள் வயவர் அருந்தலை துமித்த
          படுபுலாக் கமழும் ஞாட்பில், துடிஇகுத்து
          அருங்கலம் தெறுத்த பெரும்புகல் வலத்தர், 15

          விலங்கெழு குறும்பில் கோள்முறை பகுக்கும்
          கொல்லை இரும்புனம் நெடிய என்னாது,
          மெல்லென் சேவடி மெலிய ஏக
          வல்லுநள் கொல்லோ தானே - தேம்பெய்து
          அளவுறு தீம்பால் அலைப்பவும் உண்ணாள், 20

          இடுமணற் பந்தருள் இயலும்,
          நெடுமென் பணைத்தோள், மாஅ யோளே!

தேனைப் பெய்து அளாவிய இனிய பாலை, யான் அச்சுறுத்தியும் உண்ணாதவளாக, மணல்பரப்பிய பந்தரி னுள்ளே அங்குமிங்கும் ஒடிக் கொண்டேயிருப்பவள். நீண்ட மெல்லிய மூங்கில்போலும் தோள்களையுடைய, மாமை நிறத்தவளான எம் மகள். அவள், தான்

ஞாயிறானது, யாவற்றையும் பொசுக்கிடும் கடுங்கதிர்களுடன், முதுவேனிற் காலத்து இடைநாட்களிலே நிலைத்து நின்று எரித்தலால், மிக்க மழையினால் ஆகிய நீரும் வறண்டு போயின. பேய்த்தேர் ஒடும் அந்த அகன்ற இடத்தினையும் கடந்து, செல்பவளாவளோ?

சினத்துடன் எழுகின்ற குரலினையுடைய பேராந்தைச் சேவலானது, புல்லும் ஒழிந்த வெடிப்பிடங்கள் தனித்திடு மாறு, மலையினின்று கற்கள் உருண்டு விழும் ஓசைபோலக் கடுமையாக விட்டுவிட்டு ஒலித்துக் கொண்டேயிருக்கும் அந்த இடத்தினையும், அவள், கடந்து செல்பவளாவாளோ?

சிறிய இலைகளையுடைய வேலமரத்தினின்றும், முறையாக முற்றி விளைந்த நெற்றுக்கள் உதிர்ந்து கிடக்கும்; சிள்வீடு என்னும் வண்டு ஒலித்துக் கொண்டேயிருக்கும் ஆரவாரம் மிகுந்திருக்கும்; பரப்பினையுடைய இடமெல்லாம் வண்ணார்கள் வெவ்வுவர்ப்பு மண்ணினை எடுத்துப் போயினதால் களரி பரந்து கிடக்கும்; நெடுகக் கற்களைக் கொண்ட இடமாகவும் அது