பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 181


சொற்பொருள்: 2 கேளல் கேளிர்-ஏதிலார்.4 ஆரங்கண்ணி -ஆத்திமாலை 8.முரண்-வெற்றிச் செருக்கு10.நாளங்காடி-பகற் கடைத்தெரு. 12. குயின்று குடைந்து. 14. நிவத்தல் - உயர்தல். 17 வயம் வலம். 18. மீளி - கூற்றுவன். 20. கடும்பகட்டுயானை - கடுமையான பெரிய யானை. 23 ஆன் பொருநை - பேராறு.

94. அன்பும் ஆர்வமும்!

பாடியவர்: நன்பலூர்ச் சிறுமேதாவியார் திணை: முல்லை. - துறை: 1. வினைமுற்றி மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது; 2 தலைமகன் தன் பாங்கற்குச் சொல்லியது.

(வினைமுற்றித் தன் இல்லம் நோக்கி மீளும் தலைமகன், தன் தேர்ப்பாகனுக்குத், தன்னுடைய உள்ளத்தின் நிலைமையைக் கூறித் தேரை விரையச் செலுத்துமாறு ஏவுகின்றான்.)

தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவைஇலை முசுண்டை வெண்பூக் குழைய,
வான்எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற இடையன்
தண்கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ, 5

வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்,
ஐதுபடு கொள்ளி அங்கை காயக்,
குறுநரி உளம்பும் கூர்இருள் நெடுவிளி
சிறுகட் பன்றிப் பெருநிரை கடிய,
முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் 10

கருங்கோட்டு ஓசை யொடு ஒருங்குவந்து இசைக்கும்
வன்புலக் காட்டநாட் டதுவே - அன்புலந்து
ஆர்வம் சிறந்த சாயல்,
இரும்பல் கூந்தல், திருந்திழை ஊரே!


அன்பினாலே உள்ளம் கலந்தவள் என்னுடன் கூடி மகிழும் ஆர்வத்திலே சிறந்தவள்; நல்ல சாயலையும், கரிய பலவாகிய கூந்தலையும், திருந்திய இழையினையுமுடையவள், நம் தலைவி.

தேனடைகள் பொருந்திய மலையுச்சிகளின் பக்கலிலே, செறிந்த குவிந்த இலைகளையுடைய முசுண்டைச் செடியின் வெண்மையான பூக்கள், வானமானது விண்மீன்களைப் பூத்திருப்பது போலக் குழையப் பூத்து விளங்கும், நடு இரவின் இருளிலே, ஆட்டுக்குட்டிகளைச் சேரத் தொகுத்து வைத்துள்ள, ஓலைப்பாயை முதுகிற் கொண்டுள்ள இடையன், தண்மையான மணம் கமழும் முல்லைப் பூவினைத் தோன்றிப் பூவுடன் இணைத்து, வண்டு மொய்க்கும் நீர்வார்கின்ற கண்ணி யினனாகச், சுழன்று எரியும் கொள்ளியின் தீயிலே தன்