பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அகநானூறு - களிற்றியானை நிரை


அத்தகைய மலை நாடனே! எதிர்பார்த்து வருகின்ற இன்பம் நினக்கு எவ்வாறு அரியதாகுமோ?

மிக்க அழகினை உடைய, மூங்கிலை நிகர்த்த பணைத்த தோள்களையுடைய இவளும், நிறுத்தவும் நில்லாது நின்னையே தொடர்கின்ற நெஞ்சத்தை உடையவளாக, நின்னிடத்தே இத்தகைய காதல் உடையவள் என்றால், இவளுடைய தந்தையின் அரிய காத்தல் தொழிலையுடைய காவலாளர் சோர்ந்திருக்கும் செவ்வியை மறைவாக அறிந்து, இரவிலே இரவுக்குறி நாடி வருவதற்கும் நீ உரியவனாவாய்!

அல்லாமலும், பசுமையான புதர்கள் சூழ்ந்த வேங்கை மரங்களும், ஒள்ளிய பூங்கொத்துக்கள் விரியப் பெற்றுள்ளன; மிக்க தண்மையான திங்களும் நிரம்புதலையுற்று இருக்கின்றது; அதனையும் நீதான் அறிவாயாக!

சொற்பொருள்: 1. கோழிலை - கொழுவிய இலை; கோள் - காய், 3. ஊழ்படு - முறைமைப்பட்ட 5. அறியாது உண்டல் - உண்பதனால் கிளிமயக்கம் ஏற்படும் என்பதறியாது உண்டல். 6. கறிவளர் சாந்தம் ஏறாதென்றது, அக்காட்டு வளமும் கூறியதாகும். 7. வீ அடுக்கம் - பூப்படுக்கை, 8. குறியா இன்பம் - முயற்சியும் உளப்பாடும் இன்றி வந்த இன்பம்.11.வெறுத்த-மிக்க 14. சோர்பதன் - இகழ் பதம் 16. வேங்கை மலர்ந்தன என்றலால், தினை முற்றிய தனால் தலைவி இற்செறிப்புண்டாள் எனப் பகற்குறி மறுத்ததாம். 14. காவலர் சோர்பதன் ஒற்றி என்றலால், அது அருமையாதலை உணர்த்தி இரவுக் குறியாகிய அதுவும் மறுத்து வரைவு கடாயதாயிற்று. 17 திங்கள் நிரம்பிற்று என்றது, வளர்பிறை அன்றிக் கல்யாண நாட்கொள்ளாராகலின், அதுவும் ஆயிற்று என உணர்த்தி, வரைவு வேட்டதாகும்.

விளக்கம்: 'கடுவனின் அறியாமை போன்றே, நீயும் களவிலே கூடி, நின் அறநெறியையும் தப்பி, இக்களவினை நீங்கி வரையவுமாட்டாது, இதன்பாலே மயங்கா நின்றனை’ என்று, குறிப்பால் தலைவனின் செயலைச் சுட்டிக் கூறியது எனவும் கருதலாம். 'குறித்த இன்பம் நீ வரைந்துவரின் நினக்கு எங்ஙனம் அரியதாகும்?' என்று, தோழி, தலைவனுக்கு உறுதி கூறி வரைந்து வரத் துரண்டுகின்றாள்.

3. பின்நின்று துரக்கும் நெஞ்சம்!

பாடியவர்: எயினந்தை மகனார் இளங்கீரனார். திணை: பாலை. துறை: முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான் தலைமகன். பிரிந்து சென்றவன், இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற