பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

அகநானூறு - களிற்றியானை நிரை



97. ஆழேல் என்றி தோழி!

பாடியவர்: மாமூலனார். ஒளவையார் எனவும் குட்வுழுந்தனார் எனவும் பாடங்கள். திணை: பாலை, துறை: வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் கூறியது.

(தலைவன் வந்துவிடுவான், நீ வருந்தி மெலியாதே' என்று, தலைவியைத் தேற்ற முயல்கிறாள் தோழி. அவளோ, இளவேனிற் பருவத்தையும், மாம்பூக்களைக் கோதும் குயிலின் குரலினையும் சுட்டி, "எப்படியும் என் கண்ணிரை என்னால் நிறுத்த முடியும்?” என்கிறாள். காதலியின் உள்ளத்துயரைக் காட்டும் சிறந்த பாடல் இது)

          'கள்ளிஅம் காட்ட புள்ளிஅம் பொறிக்கலை
          வறன்உறல் அம்கோடு உதிர, வலம்கடந்து,
          புலவுப்புலி துறந்த கலவுக்கழிக் கடுமுடை ,
          இரவுக்குறும்ப அலற நூறி, நிரைபகுத்து,
          இருங்கல் முடுக்கர்த் திற்றி. கெண்டும் 5
 
          கொலைவில் ஆடவர் போலப், பலவுடன்
          பெருந்தலை எருவையொடு பருந்துவந்து இறுக்கும்
          அருஞ்சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
          இருங்கழை இரும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
          நுணங்குகட் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு 10

          அகவுநர்ப் புரந்த அன்பின் கழல்தொடி,
          நறவுமகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
          வயலை வேலி வியலூர் அன்னநின்
          அலர்முலை ஆக்ம் புலம்பப்பல நினைந்து,
          ஆழேல், என்றி - தோழி: யாழஎன் 15

          கண்பனி நிறுத்தல் எளிதோ - குரவுமலர்ந்து,
          அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்
          அறல்அவிர் வார்மணல் அகல்யாற்று அடைகரைத்
          துறைஅணி மருது தொகல்கொள் ஓங்கிக்,
          கலிழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத்து 20

          இணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப்
          புகைபுரை அம்மஞ்சு ஊர,
          நுகர்குயில் அகவும் குரல்கேட் போர்க்கே?

"கள்ளிகள் நிறைந்த அழகிய காட்டினிடத்தே, புள்ளி களாகிய அழகிய பொறிகளையுடைய கலைமானை, வறட்சியுற்ற அதன் அழகிய கொம்புகள் உதிருமாறு, அதனைத் துரத்திக் கொன்றுதின்ற, புலால் நாற்றமுடைய புலியானது கைவிட்டுப்