பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/202

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

அகநானூறு -களிற்றியானை நிரை

சிறுகோலை உடையவராயிருப்பர். இருவகை வேனிலும் வந்த பாடல் இது.

98. ஆடியபின்னும் வாடியமேனி!

பாடியவர்: வெறிபாடிய காமக்கண்ணியார். திணை: குறிஞ்சி. துறை: 1. தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. 2. தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉமாம்.

(தன் மேனியின் வாட்டங்கண்டு, அன்னை வெறியாடலுக்கு வேண்டுவன செய்யத், தலைவி இவ்வாறு கூறி வருந்துகிறாள். கேட்ட தலைவன், அவளை அவ்விடர்ப் பாட்டினின்றும் நீக்கக் கருதியவனாக, வந்து மணந்து கொள்வான் என்பது கருத்து)

<poem>

         பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன் 
         துனிஇல் கொள்கையொடு அவர்நமக்கு உவந்த 
         இனிய உள்ளம் இன்னா ஆக, 
         முனிதக நிறுத்த நல்கல் எவ்வம்  
         சூர்உறை வெற்பன் மார்புஉறத் தணிதல் 

5

         அறிந்தனள் அல்லள், அன்னை; வார்கோல் 
         செறிந்துஇலங்கு எல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக், 
         கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப் 
         பொய்வல் பெண்டிர் பிரப்புஉளர்பு இரீஇ, 
         'முருகன்ஆர் அணங்கு என்றலின், அதுசெத்து 

10

         ஓவத் தன்ன வினைபுனை நல்இல் 
         'பாவை அன்ன பலர்ஆய் மாண்கவின் 
         பண்டையின் சிறக்க,என் மகட்கு'எனப் பரைஇ, 
         கூடுகொள் இன்இயம் கறங்கக்களன் இழைத்து, 
         ஆடுஅணி அயர்ந்த அகன்பெரும் பந்தர், 

15

         வெண்போழ் கடம்பொடு சூடி, இன்சீர்
         ஐதுஅமை பாணி இரீஇக், கைபெயராச், 
         செல்வன் பெரும்பெயர் ஏத்தி, வேலன் 
         வெறிஅயர் வியன்களம் பொற்ப வல்லோன், 
         பொறிஅமை பாவையிற் றுங்கல் வேண்டின், 

20

         என்ஆம் கொல்லோ? - தோழி! - மயங்கிய 
         மையற் பெண்டிற்கு நொவ்வல் ஆக 
         ஆடிய பின்னும், வாடிய மேனி 
         பண்டையிற் சிறவாது ஆயின், இம்மறை 
         அலர்ஆ காமையோ அரிதே, அஃதான்று, 

25 </poem