பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/203

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 189


அறிவர் உறுவிய அல்லல்கண் டருளி,
வெறிகமழ் நெடுவேள் நல்குவ னேயெனின்,
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது எனக்
கான்கெழு நாடன் கேட்பின்,
யான்உயிர் வாழ்தல் அதனினும் அரிதே!

30

தோழி!

பணிமேகங்கள் தவழும், உயர்ந்த வளம்பொருந்திய பக்க மலையிடத்தே, வெறுப்பில்லாத கொள்கையுடன், மன்னர் நமக்கு உவந்த அவரது இனிய உள்ளம், இப்போது இன்னாவாக ஆயினமையின், நாம் சினங்கொள்ளுமாறு, நம்மிடத்தே அவர் நிலைபெறுத்திய அருள், 'வருத்தம்' ஒன்றேயாகும்.

தெய்வம் வாழுகின்ற மலையினை உடையவனாகிய, அவன் மார்பு உறுவது ஒன்றினாலேயே நம் நோய் தணிவதாதலை, நம் அன்னையும் அறிந்தனள் அல்லள். - நீண்ட கோற்றொழில் அமைந்த, நெருங்கி விளங்கும் ஒளி பொருந்திய தோள்வளைகள், நெகிழ்வுற்ற நிலையினைப் பார்த்தாள். செயலற்ற உள்ளத்தினளாயின்ாள்; குறி கேட்கவும் தொடங்கினாள்.

முதுமை வாய்ந்தவரும், பொய் கூறலிலே வல்லவருமாகிய, கட்டுவிச்சியரான பெண்டிர்கள், பிரப்பரிசியைப் பரப்பிவைத்து, 'இது முருகனது செயலால் வந்த வருத்தம், என்று கூறலின், அதனையே வாய்மையாகவும் கருதினள்.

'ஒவியத்தைப் போலப் புனைந்த தொழிற்றிறங்களையுடைய நல்ல மனையிலே, பாவையைப் போலப் பலராலும் ஆராயப்பெறும் மாண்புற்ற அழகானது, என் மகளுக்குப் பண்டைய நாளிற்போலச் சிறப்புறுக’ என்று, தெய்வத்தை வேண்டியும் பராவினள். r இணைந்த பலவாய இனிய இயங்கள் ஒலிக்க, வேலனுக்கு வெறியாடும் களனை இழைத்து, ஆடுதற் கேற்றவாறு அழகு செய்த, அகன்ற பெரிய பந்தலே,

வெள்ளிய பனந்தோட்டினைக் கடப்பமலரோடும் சூடியவனாக, இனிய சர் அழகியதாக அமைந்த தாளத்துடனே பொருந்தி, அடியவரைக் கைவிடாத முருகக் கடவுளின் பெரும் பெயர்களை ஏத்தித் துதித்து, வேலன் வெறியாடும் பெரிய களம், அழகு பெறுமாறு, வல்லோன் பொறியமைத்து ஆட்டுவிக்கும் பாவையைப்போல ஆடுதலையும் விரும்பினால், என்ன ஆகுமோ? வெறியாடுங் களத்திலே வந்து கூடிய, மயக்கம் பொருந்திய பெண்களுக்குத் துன்பம் உண்டாக, வேலன் ஆடிய பின்னரும்,