பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

அகநானூறு - களிற்றியானை நிரை


என்னுடைய வாடிய மேனி முன்போலச் சிறந் திடாமற் போமாயின், இக் களவொழுக்கம், பலரும் தூற்றுமாறு வெளிப்படாதிருத்தலோ அரிதாகுமே!

அஃதல்லாமலும்,

அறிவுடையவராகிய நம் த்லைவர் நமக்கு உறுவித்த அல்லலைக் கண்டு, அருள் கொண்டவனாகி மணம் கமழும் நெடுவேளாகிய வேலன், நம் முன்னைய அழகினைத் தந்தனன் என்றாலோ, செறிந்த தொடியுடையாள் உற்ற துன்பமும் பிறிதொன்றாற் போலும்? எனக், காடுகெழுமிய நாடனாகிய தம் தலைவன் கேட்பானாயின், முற்கூறிய துன்பத்தினும் பெரிதாக யான் உயிருடன் வாழ்தலே அரிதாகி விடுமே!

சொற்பொருள்: 1. பனிவரை - குளிர்ந்த மலையும் ஆம். கவா அன்- பக்கம்.2.துணி துன்பம்.4, முனிதக சினங்கொள்ளுமாறு: வருந்துமாறு. நல்கலும் எவ்வமே என்க.9.பிரப்புளர்பு இரீஇ-குறி சொல்வோர் பலபகுதியாகக் கூடையிலே அரிசியை முருகனுக்குப் பலியாக இட்டு வைத்தல். 14. கூடுகொள் - இணைந்து கொள்ளும் இயம் என்க. 16. வெண் போழ் - போழப்பட்ட பனந்தோடு. சீர் - தாள இறுதி. 19. வல்லோன் - பாவை செய்வதிலே வல்லவன்.20. பொறியமை பாவை-சூத்திரப் பாவை. 22 மையற் பெண்டிர் - மயங்கிய பெண்டிர்.

விளக்கம்: இது தலைவி கூற்றாதலே பொருத்தம் உடையதாகும். தோழி கூற்றாயின், தலைவிக்கு உறும் வருத்தம் தனக்கு உற்றதுபோலத் தோழி மேற்கொண்டு கூறினாள் எனல் வேண்டும். s

99. நயவரும் கானம்!

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ. திணை: பாலை, துறை: உடன்போகிய தலைமகளைத் தலைவன் மருட்டிச் சொல்லியது.

(தன் தலைவியோடு உடன்போக்கிலே செல்லலுற்ற தலைவன், தன் காதலிக்கு வழிநடை வருத்தம் தெரியாதிருக்கக், காட்டின் அழகினைக் கூறி, அவளுக்குத் தெம்பு ஊட்டுகின்றான்)

          வாள்வரி வயமான் கோளஉகிர் அன்ன
          செம்முகை அவிழ்ந்த முள்முதிர் முருக்கின்
          சிதரார் செம்மல் தாஅய், மதர்எழில்
          மாண் இழை மகளிர் பூணுடை முலையின்
          முகைபிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇநனை 5