பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/213

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 199


விளக்கம்: "அதர் பார்த்திருக்கும் ஆறலை கள்வர் போல, அவர் பிரியும் அமையம் பார்த்திருந்து, பசலை என் நலனைக் கவர்ந்தது என்க. 'குறும்பூழ்ச் சேவல் துறை விட்டுச் சென்று, மனையிறையினின்றும் தன் துணையை நினைந்து வருந்தும் என்பதுபோல, அவரும், அவ்விடத்தே நம்மை நினைந்து வருந்துவாரோ? என்பதும் குறிப்பு. -

104. இனிது செய்தனையால் எந்தை!

பாடியவர்: மதுரை மருதனிளநாகனார். திணை: முல்லை. துறை: வினைமுற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.

(வேந்துவினை முடிக்கத் தன் காதலியைப் பிரிந்து சென்ற தலைவன், சென்ற தன் வினையைச் செவ்வனே முடித்து விட்டவனாக, மீண்டும் வருகின்றான். அப்பொழுது, அவனை எதிர்ப்பட்ட தோழி, அவனை உளமாற வாழ்த்து கின்றாள்.)

வேந்துவினை முடித்த காலைத், தேம்பாய்ந்து
இனவண்டு ஆர்க்கும் தண்நறும் புறவின்
வென்வேல் இளையர் இன்புற, வலவன்
வள்புவலித்து ஊரின் அல்லது, முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா 5
  
நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்
வாங்குசினை பொலிய ஏறிப்; புதல
பூங்கொடி அவரைப் பொய்அதள் அன்ன
உள்இல் வயிற்ற, வெள்ளை வெண்மறி, -
மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய, - 10

புன்றலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவைஇலை ஆரின் அங்குழை கறிக்கும்
சீறுர் பலவிறக்கு ஒழிய, மாலை
இனிதுசெய் தனையால் - எந்தை! வாழிய!
பணிவார் கண்ணள் பலபுலந்து உறையும் 15

ஆய்தொடி அரிவை கூந்தற்
போதுகுரல் அணிய வேய்தந் தோயே!

எம் தலைவனே!

வேந்தனின் ஏவலை நிறைவேற்றி முடித்தனை. அக் காலத்தே, வெற்றிபொருந்திய வேலினையுடைய வீரர்கள் இன்புறுமாறு, பாகன் கடிவாளத்தினை இழுத்துப் பிடித்துச் செலுத்தினால் அல்லாது, முள்ளினால் குத்தப் பெற்றால், கடல் சூழ்ந்த உலகமே அவற்றின் ஓட்டத்திற்கு இறுதியாகும்