பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

அகநானூறு -களிற்றியானை நிரை


ஆணினத்தைக் கவர்ந்து வரும், பகைவருடன் பொருதல் அமைந்த, பலபடக் கிடக்கும் நெறிகளிலே, மலை முழைஞ்சுகளும் வெடித்துப் போவதற்கேதுவாகிய வேனிற்காலத்தே, அவள் செல்லவும் துணிந்தனளே!

அவ்விடத்தைக் கடந்து செல்லுவதற்கு, அவள் எங்ஙனம் வல்லவள் ஆவாளோ?

சொற்பொருள்: 1. அகலறை - பாறையிடுக்குகள். அரும்பு முதிர் வேங்கை - மலர்ந்த வேங்கை, 2. தொடலை தழையுடை 6. ஈனாத்தாயர் - செவிலித்தாயர். 7. பந்து புடைப்பன்ன பாணி - பந்துகளை அடிக்கும்போது அவை துள்ளித் துள்ளிச் செல்வது போன்ற பாணி. 11. துப்பு - வலிமை. 12. கல்வாய் - கல்லும் காயும். 15. சுரை - பால்மடி -

106. வயிறு அலைஇயர் சென்மோ!

பாடியவர்: ஆலங்குடி வங்கனார். திணை: மருதம். துறை: தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

'தலைவிக்குப்பாங்காயினார் கேட்பச் சொல்லியது' என்பர் பேராசிரியர்.

(பரத்தை ஒருத்தியை, அவளுடன் தன் கணவன் உறவு கொண்டிருப்பதாக ஒரு மனைவி சந்தேகப்பட்டு, அவளையும் அவனையும் சேர்த்துப் பழித்தாளாம். அதனால் குமுறுகிறாள். 'வாருங்களடி! நம்மைப் பார்த்து அவள் வயிற்றிலே அறைந்து கொள்ளும்படியாக, அந்தப் பக்கமாகவே சென்று உலவி வருவோம்’ என்கிறாள் அவள்.)

          எரிஅகைந் தன்ன தாமரைப் பழனத்துப்,
          பொரிஅகைந் தன்ன பொங்குபவல் சிறுமீன்,
          வெறிகொள் பாசடை, உணிஇயர், பைப்பயப்
          பறைதபு முதுசிரல் அசையுவந்து இருக்கும்
          துறைகேழ் ஊரன் பெண்டுதன், கொழுநனை 5

          நம்மொடு புலக்கும் என்ப - நாம்அது
          செய்யாம் ஆயினும், உய்யா மையின்,
          செறிதொடி தெளிர்ப்ப வீசிச், சிறிதுஅவண்
          உலமந்து வருகம் சென்மோ - தோழி! -
          ஒளிறுவாட் டானைக் கொற்றச் செழியன் 10

          வெளிறுஇல் கற்பின் மண்டுஅமர் அடுதொறும்
          களிறுபெறு வல்சிப் பாணன் எறியும்
          தண்ணுமைக் கண்ணின் அலைஇயர்,தன் வயிறே!