பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

அகநானூறு -களிற்றியானை நிரை


          நலம்நல்கு ஒருத்தி இருந்த ஊரே
          கோடுழு களிற்றின் தொழுதி ஈண்டிக்
          காடுகால் யாத்த நீடுமரச் சோலை 5

          விழைவெளில் ஆடும் கழைவளர் நனந்தலை,
          வெண்நுனை அம்பின் விசைஇட வீழ்ந்தோர்
          எண்ணுவரம்பு அறியா உவல்இடு பதுக்கைச்
          சுரம்கெழு கவலை கோட்பாற் பட்டென,
          வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர், 10

          கைப்பொருள் இல்லை ஆயினும், மெய்க்கொண்டு
          இன்உயிர் செகாஅர் விட்டுஅகல் தப்பற்குப்
          பெருங்களிற்று மருப்பொடு வரிஅதள் இறுக்கும்
          அறன்இல் வேந்தன் ஆளும்
          வறன்உறு குன்றம் பலவிலங் கினவே. 15

பல இதழ்களையுடைய மென்மலர்போன்ற மையுண்ட கண்ணினாள்; நல்ல யாழின் நரம்பின்ன இசைத்தாற் போன்று மிகவும் இனிக்கின்ற மொழியினாள்; விரும்பும் நலனெல்லாம் தருகின்ற ஒப்பற்றவள்; அவள் நம் காதலி. அவள் இருக்கும் ஊரானது,

தம் கொம்பினால் குத்திப், போர்க்களத்தே பகைவரை உழுகின்ற களிற்று யானைகளின் கூட்டம் கூடியது. அதனால், கடுங்காட்டைப்போல விளங்கியது நெடிய மரச் சோலை. ஒன்றையொன்று விரும்பிய அணில்கள் ஆடிக் கொண்டிருக்கும், மூங்கில்கள் வளர்ந்திருக்கும் இடத்திலே நடந்த போரில், வெள்ளிய முனைகளுடைய அம்பினை வேகமாகச் செலுத்த வீழ்ந்தோர் கணக்கற்றோர் ஆயினர். எண்ணினாலும், எண்ணின் வரம்பினை அறியாதபடி, தழையிட்டு மூடிய பதுக்கைகளும் எழுந்தன. சுரத்தின்கண் பொருந்திய அத்தகைய கவர்நெறிகள் எல்லாம் ஆறலைக் கள்வர் பகுதியிற் கொள்ளப்பட்டன. வழிப்போவார் எவரும் இல்லையாகி மடிந்த அச் சுரநெறியே,

வந்தோரிடத்தே கைப்பொருள் யாதும் இல்லையானாலும், அவர் உடலைக் காணிக்கையாகப் பற்றிக் கொண்டு, உயிரினைப் போக்காதபடியாக விட்டுவிட்டு வந்த தவறுக்காகப், பெரிய களிற்றின் கெர்ம்போடு, கோடு பொருந்திய புலித்தோலையும் தண்டமாக விதிக்கும், அறனற்ற வேந்தன் ஆள்கின்ற, வறட்சியுற்ற குன்றுகள் பலவும் குறுக்கிட்டுள்ளனவே! அதற்கும், அப்பால் உள்ளதே, அவர் ஊர் என்க.

சொற்பொருள்: இன்தீங்கிளவி - மிக்க இனிமையுடைய சொல். 3. நலம் நல்கு ஒருத்தி - நலம் தரும் ஒப்பற்ற காதலி. 4. தாழுதி கூட்டம். 6. விழைவு விருப்பம். வெளில் அணில்.